யாவும் கற்பனையே....


பேசும் போது எனக்கு தூக்கம்
உன் அழுக்குப் படிந்த மேனியை
சுற்றியும் துணியால் சுற்றிக் கட்டினேன்.
காதல் கிட்டத்தில் தெரியா,
காதல் கிட்டியதாய் தெரியும்,
நீ தந்த அதிர்ச்சியின் அழகு அப்படி.
உன் வாழ்வின் மீது ஒருத்தன் மிதித்து நடப்பான்.
புழுதி படிந்த இதயத்தின் மீது அவன்
பாதச் சுவட்டை விட்டுவிடுவான்.
உளவிய சேற்று வரப்பாக மாறிகிடக்கும்.
அதன் தாவுகள் அப்படியே கீறப்பட்டன.
மெல்ல மறைக்க நினைத்து
தோற்றுப் போன நீயும் நானும்.
அப்போது உன் உயிர் கொலை செய்யப்பட்டு கிடக்கும்.
யார் உன்னை விட்டும் பிரிந்தது?
மரணம் அல்லது முடிவிலி அதுதானோ!
உனக்கும் எனக்குமான இடைவெளி
வெறும் கண்ணுக்கிட்டிய தூரம்தான்.
பூச்சியத்தினை கண்டுகொள்ள எமக்கு காலம் எடுக்கிறது.
பூச்சியத்தின் அர்த்தம் புரிந்தவன் எனக்கு கூறினான்,
நான் உன்னை முத்தமிட - வேண்டும்
வாழ்க்கை
மரணத்துடன்
முடிவுற்றுவிடும்.
அவ்வளவுதான்.
என் கறுப்பு தொலைபேசியில்
உனது பெயரும்,
அந்த இடைநிறுத்தப்பட்ட இலக்கமும்.
நான் இன்றும் அழைக்கிறேன்.
யாவும் கற்பனையே....