ஆண் Vs பெண்

எமது சூழலில் ஆணும் பெண்ணும் சரிசமமாக பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் பெரிதாக கிடைக்காததன் காரணமாக எதிர் பால் என்ன நினைக்கின்றது? அவைகளுக்கிடையில் எவை சாதாரண விடயங்கள்? எவை அசாதாரண விடயங்கள் என்பது எமக்கு பொதுவாக தெரிவது கிடையாது.

ஒரு ஆண் பெண்ணிடம் பேசாமல் இருக்கும் போது அவன் ஏதோ கோபத்தில் இருப்பதாக பெண் நினைத்துக் கொள்கிறான். ஆனால் ஆண் எதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதனால் நான் பேச என்ன இருக்கிறது என நினைத்து அப்படியே சாந்தமாக இருந்து விடுவான். ஆனால் பெண்கள் பொதுவில் இந்நிலைக்கு மாற்றமானவர்கள். பெண் எப்போதும் இந்நிலையை அவளுடைய சூழ்நிலையில் இருந்தே சிந்திக்கின்றாள். பெண்கள் சோமல் இருக்கிறார்கள் என்றால் அது ஏதோ ஒரு ஊடலில் இருக்கிறாள் அல்லது கோபத்தில் இருக்கிறாள் என அர்த்தம். எனவே ஆணிடம் அவள் ஏன் நீ கோபமாக இருக்கிறாய்? ஏன் என்னுடன் பேசமாட்டாய் என கேட்கும் போது அதுவே ஆண்களுக்கு தொல்லையாக தோன்றும்.
 
பொதுவான இவ்வடிப்படையில் ஆண் பெண் என்ற நபர்களுக்கிடையில் ஆகக் குறைந்தளவிலும் ஒற்றமை இல்லாததன் விளைவாக அடிப்படை தொடர்பிலேயே குறைபாடு தோன்றிவிடுகிறது. இதுவே அவர்களுக்கிடையில் நிறையவே புரிந்துணர்வற்ற நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
 
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயல்பான உறவு ஏற்பட வேண்டுமாயின் அவர்களின் தொடர்பாடல் வெற்றிகரமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபோது நாம் பயப்படுகின்ற வகையான உறவு முறைக்கு அதிகமாக வாய்ப்புண்டு. இயல்பான உறவு முறை வளர ஒருவருக்கு ஒருவர் எப்படி மதித்து நடக்க வேண்டும்?
 
ஆண் பெண் இருவரும் சமமான மனிதராக இருப்பினும், ஆண் முளை இயங்குவதும், பெண் முளை இயங்குவதும் வௌ;வேறு விதம். ஆணின் முளையில் மொழி அல்லது தொடர்பாடல் என்பதெற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதி மிகவும் குறுகியது. எனவே பெண்ணைப் போன்று ஆண்களால் வேகமாக பேசவோ, சிந்திக்கவோ முடியாது என்பது அறிவியல் உண்மை. எனவே, ஒரு ஆண் தொடர்ந்து தன்னுடன் பேசவில்லை, நெடு நாளாக பேசவில்லை, அல்லது தொடர்ச்சியாக பேசவில்லை என்றால் அதனை பெண்கள் தம்மை புறக்கணிப்பதாக அல்லது அவமானப்படுத்துவாக நினைக்கின்றார்கள். இது கூடாத விடயம். மாறாக, அவனால் எவ்வளவு முடியுமோ அதனை அவன் பேசியிருக்கிறான் என திருப்பதிப்பட்டுக்கொள்ள வேண்டும். என்னிடம் நீ பேசவில்லையே! நான் எதிர்பார்த்ததனை நீ கூறவில்லையே! நான் அழகாகா இருக்கிறேன் என்று நீ சொல்லவில்லையே! இந்த திகதியில் இதை நீ செய்யவேண்டும் என்று உனக்கு தெரியவில்லையே! நீ ஏன் பேச தெரியாதவனாக இருக்கிறாய்? என ஒரு பெண் கேட்டால், ஆண் எப்போதும் இவள் இவ்வளவு குறை கூறுகிறாளே! நான் இவ்வளவு செய்தும் அவள் அதனை கவனிக்கவில்லையே! இவளை திருப்பதிப் படுத்துவது கடினம் என நினைத்து பின்வாங்கிவிடுகிறான்.
 
எனவே, எதிர் பால்களுக்கிடையில் இந்த புரிதல் அதிகமாகும் போது, அவனுக்கு இவ்வளவுதான் முடியும், அவளுக்கு இவ்வளவுதான் முடியும் என்று அவர்களுக்கு புரிந்து கொள்ள முடியுமாக இருந்தால் உறவுகளுக்கிடையில் தொடர்பாடல் சற்று சுவாரஷ்யம் மிகுந்ததாக வளருமல்லவா?
 
பெண்கள் முகபாவனையை அதிகம் மதிப்பிடுவார்கள். முக வெளிப்பாடுகளை வைத்து அதிக விடயங்களை கண்டுபிடித்துவிடுவார்கள். குரல் வித்தியாசத்தை வைத்து எடைபோடுவார்கள். திகதிகளை மகச் சரியாக நினைவுபடுத்துவார்கள். இந்த இந்த திகதியில் எப்படி பேச வேண்டும், எப்படி இயல்பாக கதை அடிக்க வேண்டும், சீன் போட வேண்டும் என்றெல்லாம் பெண்களுக்கு நிச்சயமாக தெரியும். பரிதாபம் என்னவென்றால் ஆண்களுக்கு இவை எதுவுமே தெரியாது. முகத்தை பார்த்து அவள் கோபத்தில் உள்ளாளா? ஏரிச்சலில் உள்ளாளா? வலியில் துடிக்கிறாளா? என்றெல்லாம் அவர்களுக்கு மதிப்பிட தெரியாது. ஏதோ ஒரு வித்தியாசம் எதிர்மறையாக தோன்றுவதை மாத்திரம்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

அப்படியென்றால் இதன் பின்னணிதான் என்னவாக இருக்கும்?
 
உங்களுக்கு விளங்கும்படியாக கூறுவதானால்,... ஆணின் மூiளை என்பது அடிப்படையில் ஒரு வேட்டைக் காரனின் மூளையில் இருந்து உருவானது. வேட்டை ஆடும் ஒருவனுக்கு மிருகம் பாவம் அதனை வேட்டையாட கூடாது என திரும்பி வந்துவிட்டால் குடும்பம் பசியால் வாடி வதங்க வேண்டியதுதான். இதன் காரணமாக, முகபாவங்களை மதித்து நடக்கின்ற மென்பொருள் இயல்பாகவே ஆண் மனிதனுக்கு இருப்பது ஆபத்து என்பதனால் அது இல்லை அல்லது பயனில் மிக குறைவு எனலாம். இதேவேளை, இந்த மென்பொருள் பெண்களுக்கு மிக அதிகமாகவே உண்டு. அப்படி இருப்பதால்தான் அவள் தன்னுடைய குழந்தை என்ன நினைக்கிறது, எதனை செய்யப் போகிறது என அறிந்து கொள்ள முடிகிறது.
 
பெண்ணை ஆண் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
 
பெண்கள் எப்போதும் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டவர்கள். எனவே, ஆண்கள் பெண்களை திருப்திப்படுத்த வேண்டும் அல்லது உறவுகளை கட்டிகாக்க வேண்டும் எனில் அவர்களோடு ஆண்களும் உணர்வுகளுக்கு கட்டுப்பட பழகிக் கொள்ள வேண்டும். பெண்கள் தமது உறவுகளில் ஆண்களை உணர்வுபூர்வமாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஆண்கள் உறவில் அவர்களை சேர்த்துக் கொள்ளும் அளவிலேயே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வித்தியாசம் என்னவெனில் ஆண்கள் உறவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை பெண்கள் உணர்வுகளுடன் பொருத்திப் பார்க்கிறார்கள் என்பதுதான்.
 
பெண் ஆணிடம் சரி சமமாக எதிர்பார்ப்பது என்ன?
 
பெண்கள் முதலில் எதனை எதிர்பார்க்கிறார்கள் எனில் ஆணின் வாழ்நாளில் அதி அதி முக்கியமான நபராக தான்தான் இருக்க வேண்டும். அவனுக்கு இந்த உலகத்தில் முதல் பெண்ணாக தான்தான் இருக்க வேண்டும், எப்போதும் நான்தான் விசேடமாகவும், முக்கியத்துவம் வாய்ந்தவளாகவும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. இதனால், அவர்களுக்கு இடம்பெறுகின்ற சிறிய சிறிய விடயங்களையும் ஆண்கள் பெரிதாக கருதி ஆ!!! அப்படியா நடந்தது? எனக் கேட்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இதனை ஆண்களோ, இந்த உலகத்தில் எத்தனையோ பெரிய விடயங்கள் இடம்பெறுகின்றன இதெல்லாம் ஒரு மேட்டரா என நினைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்ணோ! நான் முக்கியமானவள் இல்லையா? எனக்கு என்ன நடந்தாலும் அது ஒன்றுமில்லையா? எனக்கு நடந்தது அவசியமில்லையா? நான் உனக்கு விசேடமாக தெரிவதில்லையா? இதையெல்லாம் நீ கவனிப்பதில்லையா? என 
நடந்து கொள்வார்கள். 
 
மேலும், இந்த திகதிகள், பிறந்த நாள் திகதி, வருட நிறைவு திகதி, முதல் சந்திப்பபு நடந்த திகதி, என்பனவற்றையெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். கடினமான விடயம் என்னவென்றால், இவை எல்லாம் ஆண்களின் மண்டையில் நிற்பது கிடையாது. இன்று, இன்ன கிழமை இது நிகழ்ந்த நாள் என்றெல்லாம் அவர்களுக்கு நினைவில் இருப்பது கிடையாது.
 
பெண்கள் தனது குடும்பத்தை பற்றியோ அல்லது ஆணின் குடும்பத்தை பற்றி எது வேண்டுமானாலும் பேசுவார்கள். ஆனால், ஆண் பெண்ணின் குடும்பத்தை பற்றி எதுவுமே பேசக் கூடாது. அப்படி பேசிவிட்டால் பெண்களுக்கு ஆத்திரம் வந்துவிடுகிறது. எல்லா பெண்களும் பொதுவாக உறவுகளை அதிகமாக நேசிக்கிறார்கள். பெண்கள் எல்லா நேரங்களிலும் பேச்சுக்கு அடிமையானவர்கள். அவர்கள் பேச வேண்டும், அதனை யாராவது கேட்டே ஆக வேண்டும் என்பதில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். இவை இரண்டையும் ஆண் செய்துவிட்டால் அவன் மீது பெண்களுக்கு அவ்வளவு காதல் ஏற்பட்டுவிடும்.
 
ஏன் ஆண்களால் இவை முடிவதில்லை?
 
அது அவர்களின் மூளை திறனின் இயல்பாகும்;. அவர்களின்  மூளையின் வடிவாந்த முறையே அவர்களுக்கு சில விடயங்கள் பதியவே பதியாது. பெண்கள் இந்த உடலியல் தன்மையை புரிந்து கொள்ளாத வரை ஆண்கள் வேண்டுமென்றே இதனை செய்வதாக கருதிவிடுகிறார்கள். இது வெறும் அறியாமையாகும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, ஆண் முளையில் மொழிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதி மிகவும் சொற்பமானது என்பதனால், ஆரம்பத்தில் அவர்களுடைய தொடர்பாடல் என்பதே தவறாகத்தான் இருக்கும். உறவாடும் போது தொடர்பாடல்தானே மூலமாக அமைய வேண்டும். என்னுடன் பேச வேண்டும், கொஞ்சி குலாவ வேண்டும், கடலை போட வேண்டும் என்பவை எல்லாம் மொழி மூலமாகத்தானே முடியும். இதுதான் ஆணுக்கு இயல்பாக வராதே!!!
 
எனவே, இந்த வழியாகத்தான் பெண்ணை அடைந்துகொள்ள வேண்டும் என்பதனால் ஆண் மிகவும் துன்பப்பட வேண்டியதாயிற்று.
இந்த இயலாமையை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆண் குறிப்பிட்ட விடயத்தை செய்து காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு முயற்சி செய்தாலே அவர்களுக்கு புள்ளி கொடுத்துவிட வேண்டும். ஒரு விடயத்தை அவன் நினைத்தால் அவனுக்கு புள்ளி, செய்ய முயற்சித்தால் அவனுக்கு புள்ளி என்று இருக்கு வேண்டும். ஆனால் பெண்களோ! நீ செய்து முடி, பிறகுதான் புள்ளி கிடைக்கும் என்கிறார்கள். இந்த நிலமைதான் மாற்றம் பெறவேண்டும்.
 
ஆண் எப்படி பெண்ணை புரிந்து கொள்ள வேண்டும்?
 
இதனை ஒரு உறவாக ஆரம்பிக்கலாம். ஆண்கள் எப்போதும் எடுத்த மாத்திரத்தில் பெண்களின் குணத்தை பார்ப்பது கிடையாது. அவர்களின் அழகைத்தான் பார்ப்பார்கள். எனவே, அவர்கள் பெண்களின் வேறு எந்த அம்சத்தினையும் கருத்திற் கொள்வதில்லை என்பது அர்த்தமல்ல. அவர்களின் உடலியல் தோற்றத்தை கொண்டே மற்றய யாவற்றையும் அவர்கள் எடை போடுவார்கள். இது பொதுவாக ஒவ்வொரு ஆணுக்கும் வேறுபடும். அழகில் திருப்பதியுற்ற பின்னர், அடுத்து அவர்களின் ஆளுமையை கருத்தில் எடுப்பார்கள். அதனை அடுத்து அவள் ஒரு நல்ல குடும்ப பெண்ணாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் அக்கரை காட்டுவார்கள். அவள் குடும்பத்தில் எப்படி வளர்க்கப்பட்டுள்ளாள், எங்கு அவள் வாழ்கிறாள், அவள் கிராமப் புறத்திலிருந்து வந்ததவளா, அல்லது நகர்புறத்தில் வழ்பவளா, அவளிடம் எனது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுமா என்றெல்லாம் அலசுவார்கள். இதனை கருத்திற்கொள்கின்ற போது ஆண்கள் லிபரல் வகையினராகவும், கன்சவேட்டிவ் நிலையில் இருந்து சிந்திப்பவராகவும் காணப்படுவார்கள். இவற்றின் பின்னணியில் பெண்ணின் ஆடை முறை, ஸ்டைல், அவர்களின் உடல் வாகு, அவர்கள் கூடிப் பழகுகின்ற நபர்கள் மற்றும் நண்பிகள் முதலியன காணப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 
 
இதில் சுவாரசியமான விடயம் யாதெனில், ஆண் ஆரம்பத்தில் பழகுகின்ற போது பெண் தன்னுடன் அழகாக பேச வேண்டும், தன்னைப் பற்றி அக்கரையாக இருக்க வேண்டும், தான் சொல்கின்ற விடயங்களுக்கு செவி மடுக்க வேண்டும், நான் கூறுகின்ற விடயங்களை செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கின்றான். சந்தோசமாக தாம் விரும்பவது போன்று இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறான். ஆனால் திருமணம் என்ற நிலைக்கு வருகின்ற போது, தனது குடும்பத்திற்கு பொருத்தமானவளாக அவள் இருக்க வேண்டும், தன் அம்மா சமைப்பது போன்று சமைக்க வேண்டும், அவர் கூறுகின்ற ஆடை மாதிரித்தான் அணிய வேண்டும், எனது குடும்பம்  கூறுகின்ற மாதிரித்தான் நடக்க வேண்டும், அவர்கள் கூறுவதுதான் எமது வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும், அதுதான் சரி. எனது வீட்டில் எது நடந்தாலும் அதற்;கு நீ கட்டாயம் அனுசரித்து போக வேண்டும் என்று ஒரு கட்டளையை போட்டு விடுகிறான்.
 
எனவே இங்கு ஆண் மூளை இரண்டு நிலையில் செயல்படுவதை அவதானிக்கலாம். தான் சுதந்நதிரமான மனநிலையில் இருந்து கொண்டு தீர்மானம் எடுக்கின்ற போது தான் நினைப்பதையெல்லாம் முடிவாக கொள்கின்ற சந்தர்ப்பம். பின்னர் திருமணம் என்று வருகின்ற போது தனது தீர்மானங்களை விட்டுவிட்டு தனது தாய் தந்தையின், குடும்பத்தின் தீர்மானங்களை எடுத்து நடக்கின்ற நிலைக்கு ஆண் தொழிற்படுகிறான். திருமணத்தின் பின்பு நிகழ்கின்ற அதிகமான பிரச்சினைகள் இதனாலேயே ஏற்படுகின்றன. திருமணத்தின் முன்பு பெண் கூறுவதனை எல்லாம் கேட்டு நடந்த ஆண் திருமணத்தின் பின்பு தனது தாய் மற்றும் குடும்பத்தினர் கூறுகின்ற விடயங்களை அந்த பெண் எடுத்து நடக்க வேண்டும் என கூறுகிறான். இது மிகவும் சிரமமானது என்பதனால் அதிக பிரச்சினைகள் எழுகின்றன.
 
ஆண் பெண் உறவில் மத்திமமாக எது இருக்க வேண்டும்?
 
மத்திமமாக இருக்க வேண்டியது இருவருக்கும் இடையிலான தொடர்பாடலாகும். அதாவது, இருவருக்கும் இடையில் இளமைப்படுவத்தில் இருக்கின்ற அழகு, கவர்ச்சி முதலியன வயதாகும் போது தானும் கூடவே மறைந்துவிடும். எனவே வயதான காலத்தில் உறவை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்வதாக இருந்தால் குறைந்தது அவர்கள் தமக்கு இடையில் பேசுகின்ற போது மகிழ்ச்சியாகவும்;, கிண்டல், நகைச்சுவை உணர்வுகளுடன் பேச முடியுமல்லவா. இவ்வாறு பேசுகின்ற போது மீதமிருக்கின்ற காலத்தை சந்தோசமாக கழிக்க முடியும். ஆவ்வாறில்லாமல் பேசுகின்ற போது இருவருக்கும் இடையில் சண்டையும் சச்சரவுகளும் ஏற்படுகின்றது என்றால் அத்தகைய உறவை சந்தோசமாக நீடிக்க முடியுமா?
 
எனவே, இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு ஆணை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? ஒரு பெண்ணை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். உண்மையில், ஒரு ஆணை அவனுடைய உடலியல் இயல்பையும் வைத்து புரிந்து கொள்வதுதான் ஆணைப் புரிந்து கொள்வது என்பதாகும். ஒரு பெண்ணை அவளுடைய உடலியல் இயல்பையும் வைத்து புரிந்து கொள்வதுதான் பெண்ணை புரிந்து கொள்வது என்பதாகும். இந்த விடயங்கள் இதுவரை காலமும் ஒரு சுவாரசிய விடயத்துக்காகவே பேசப்பட்டு வந்தன. வெறும் சிலேடைகளாகவே வரையறுக்கப்பட்டும் வந்திருக்கின்றன.
 

ஒரு ஆணின் உடல் மொழிக்கான அர்த்தம் என்ன? ஒரு பெண்ணின் உடல் மொழிக்கான அர்த்தம் என்ன? என்பதெல்லாம் ஒரு மர்மமான விடயங்களாகவே நோக்கப்படுகின்றன. ஒரு பெண் ஒரு விடயத்தை இந்த அர்த்தத்தில் கூறும் போது அது எந்த அர்த்தத்தில் விளங்க வேண்டும். ஒரு ஆண் பெண்ணிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? ஒரு பெண் ஆணிடத்தில் இருந்து எதிர்பார்ப்பது என்ன? அவர்கள் ஒருவரில் மற்றவர் எதை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்? எந்த சிறிய விடயமாக இருப்பது ஆணை வருத்தத்திற்கு ஆளாக்கிறது? எந்த சிறிய விடயமாக இருப்பது பெண்ணை வருத்தமுற செய்கிறது? இவற்றில் எந்தெந்த விடயங்கiளை மாற்றிக் கொள்ள முடியும் என்பதனை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இங்கு சில விடயங்கைளை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் நம்மிடத்தில் இருக்கின்றன. அதேவேளை, சில விடயங்களை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. எமது அடித்தளம் என்ன? மட்டுப்பாடுகள் என்ன?  தடைகள் என்ன? எங்கு அதனை விருத்தி செய்ய முடியும்? எங்கு அதனை விருத்தி செய்ய கூடாது? என்பதனை அறிந்து வைத்திருந்தால் எமது உறவுகள் மகிழ்ச்சிகரமாக நிலைக்க வழி ஏற்படுத்தும் அல்லவா.

0 comments:

Post a Comment