இன்று நட்பு நாளாம்

வழமை போன்று இன்றும் ஒரு விடயம் என்மனதில் கிள்ளியது. கிள்ளியன எல்லாவற்றினையும் இங்கே அள்ளி வைக்க முடியாது என்பதனால், அள்ளிய ஒன்றை மட்டும் எமது மண்டைக்குள் வைத்துகொள்வோம். சிலவேளை நீங்கள் இப்படியெல்லாமா கொல்வது என்று கூட கேட்கலாம். கொள்வதாக நினைப்பதுவும், கொல்லுவதாக நினைப்பதுவும் அவரவர் தலைவிதி, நான் என் செய்வது? எனக்கென்ன தலையெழுத்தா உங்களைப்பற்றி நினைக்க.... விடயத்துக்குள் போவோம்.
எனக்குத் தெரிந்த நன்பர்கள் கூட்டம் ஒன்று இருக்கின்றது. அவர்கள் உண்மையில் நண்பர்கள்தானா என்பது வேறு கதை, அது இருக்கட்டும். தேவையில்லா பிரச்சினைக்குள் நாம் ஏன் முக்கை விடணும். இன்று அவர்களில் ஓரிருவரை சந்தித்த வேளை அவர்களில் வழமைக்கு மாற்றமான நிலை தோன்றியது. அப்போது நானும், இன்று என்ன விசேடம்? என்று கேட்டேன். அது ஏன் நான் வழமைக்கு மாற்றமான நிலை குறித்து விசேடம் என்று கேள்வி கேட்டேன் என்றால், இன்று வழமைக்கு மாற்றமானவையெல்லாம் விசேடம்தானே! அதுதான். ல்லாம் இன்று மாறிவருகின்றது என்றால், அது விசேடம்தான். அது என்ன விசேடம் என்றால் அவர்கள் அணிந்திருந்த ஆடையில் நோக்கம் பிறழந்து விசேடம் கண்டிருந்தது அவ்வளவுதான். அப்போது அவர்கள் கூறிய பதில் 'இன்று நண்பர்கள் தினம்'. அப்போது மனதுக்குள் அதுவும் ஒரு விசேடம்தான் என் நினைத்துக் கொண்டேன். பாருங்கள் எப்படியெல்லாம் ஏமாறுகின்றார்கள் என்று. 

உண்மையில் நண்பர்கள் என்று ஒரு கூட்டப் பெயர் இருந்தால் அது ஏக காலத்திற்கும் நிலையாக இருக்க வேண்டும். ஆப்போதுதானே அப்பெயர் அதன் உண்மையான கருத்தினை உறவில் கொண்டிருந்தது என்று கூறலாம். ஆனால், இருக்கின்றவரை நாம் பிரியாமல் இருப்போம் என்றால் அதற்கு பெயர் என்ன நட்பா? ஆம் என்றால், ஆயுள் வரை நீடிப்பதற்கு பெயர்தான் என்ன? ஏனக்குத் தெரியாது. ஏனக்கு சரியாக கூற முடியாது ஏனென்றால் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்களாம் என்று தற்போதும் கூறுகின்றார்கள். நாங்கள் நட்பாயிருக்கின்றோம் என்று பகட்டிக்கொள்கின்றவர்களின் அடுத்த வருடம் எப்படியிருக்கும் என்று அவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருந்தும், இப்படியொரு கட்டாய நடிப்புக்கு ஈடுகொடுக்கிறார்கள். காரணம் தெரியாது.....அவர்களுக்கும்தான்.

இப்படி நான் சிந்திக்கும் போதுதான் எனக்கு சில வார்த்ததைகள் நினைவுக்கு வந்தன. இவைதான் அவை.....

எத்தனை காலம் இந்த நட்பு தொடரும்?
ஒரு வருடம்?
ஒரு மாதம்?
ஒரு நாள்?
ஒரு நிமிடம்?
அல்லது காலம் முழுவதுமா?
ஆயுள் முழுவதும்?
இராச பக்தி,
நம்பிக்கை,
கவனிப்பு,
இருக்கும் வரைதான் அது.
எனக்குத் தெரிந்தவரை,
நட்பு படுவித்தியாசமானது...
பனங்கள்ளைப் போல.

இப்படியெல்லாம் கூறினால், நட்பு கொள்ள முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். நான் அவ்வாறு கூறவில்லை. ஏனக்கும் நட்பு ஒன்றிருக்கின்றது. இன்று நான் எனது நன்பியை சந்தித்திருந்தேன். நன்பியா? ன்று வாயைத் திறக்க வேண்டாம். பின்னர் உங்கள் நன்பர்கள் அனைவரும் அவர்கள் வாயைத் திறந்துவிடுவார்கள்.

இன்று நான் அவளை சந்தித்தேன்,
அவள்தான் நான் உணர்கின்ற அத்தனையையும்
சூசகமாக புரிந்துகொள்கின்றவள்.
அவளுக்குத் தெரியும்,
எனக்குள் இருக்கன்ற பிரச்சினைகள்,
எனது பலயீனங்கள் எதுவென்று.

எனது அற்புதங்கள் அவளுக்கு தெரியும்,
எனது கனவுகளை மதிக்கவும் தெரியும்.
வாழ்க்கையையும், அதனுள் பொதிந்துள்ள காதலையும்,
நான் விளங்கியிருக்கும் பாங்கை,
அவள் கேட்டுத் தெளிந்துள்ளாள்.
அவற்றின் அர்த்தம் என்னவென்று அவளுக்கு தெரியும்.
எப்போவாவது, அவள் எனக்கு இடைஞ்சலாயிருந்தாளா?
செய்தது தவறென்று கூறினாளா?
இல்லை.

நான் எதனை நோக்கி பயணிக்கின்றேன் என்பதனை
அவள் விளங்கிக்கொண்டாள்,
நீண்ட காலம் ஒன்றிற்கு 
என்னோடு தங்கவும் உறுதியளித்தாள்.

நானும் உரு படி மேல் சென்று,
அவள் மீதான எனது அக்கரையினை வெளிப்படுத்தினேன்.
அவளை கிட்ட நெருங்க இழுத்து,
அவளுடைய தேவை எனக்கு அவசியம்
என்பதனை தெரியப்படுத்தினேன்.
இன்னும் சற்று அருகில் அவளை நெருங்கவென,
அவளுடைய கையை பற்றினேன்.
அப்போதுதான், 
நான் சந்தித்த நட்பு வேறென்றுமில்லை,
முகம் பார்க்கும் கண்ணாடி என்பதனை உணர்ந்தேன்.    

எல்லோரும் ஒரு வகையில் ஒற்றுமையானவர்கள்தான்


நேற்று மாலை எனது நன்பி ஒருவருடன் நீண்ட நாட்களுக்கு பின்பு கையடக்க தொலைபேசியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன் போது அவள் நான் இந்த மூஞ்சிப்புத்தகத்தில் கிறுக்குகின்றவைகளை வாசிப்பதாக கூறிவிட்டு என்னை ஒரு பின் நவீனத்துவத்திற்குள் சிதறிப்போய்க் கிடக்கின்ற தூசியாக நினைவூட்டிவிட்டு நான் அவ்வப்போது கிறுக்குகின்றவைகள் ஏதோ ஒரு பாதிப்பினை வெளிக்காட்டுவதாகவும்இ ஆனால் எதையும் மட்டிட்டு கூற முடியாதுள்ளதாகவும் கூறினாள். நியாயம்தான் சாதாரணமாக எவருடைய வரையறைகளுக்குள்ளும் கட்டுண்டு கிடக்காமல் சுயசிந்தனையில் கிறுக்குகின்றவைகள்தான் இவைகள். இதனைச் சிலர் ......இல்லை பலர் தான்தோன்றித்தனம் என்றும் கூறுவர். மன்னிக்க வேண்டும். நன்றாக சிந்தித்து பார்த்தால் சிலர் என்றாலும்......பலர் என்றாலும் இரண்டும் குறைப்பதந்தான். வரையறைகளுக்குள்ளும் மட்டுப்பாடுகளுக்குள்ளும் சிக்கித்தவிக்கும் போதுதான் நாம் எம்மை மட்டும் குறுக்கி அணுகுகின்றோம். இங்கு யாவருக்கும் இருக்கின்ற நன்மை தீமைகள் ஒன்றுதான் என்றால் பொதுவாகத்தானே தென்படும்.




இதற்கிடையில்தான் நான் நேற்று எனக்கு இருக்கின்ற வியாதியினை தீர்த்துக்கொள்ள புத்த கடைக்குச் சென்றேன். அங்கு ஒரு வழமையிருக்கின்றது........கடைக்கு வருபவர்கள் எல்லோரும் செருப்பை உள்ளே போக முன்பு வெளியில் களற்றி வைத்துவிட்டு போக வேண்டும். வேறு ஏதெனும் பொருட்கள் கொண்டு சென்றாலும் அவைகளை வைப்பதற்கு அங்கு வேறாக ஒரு மேசை தயாராக இருக்கிறது. ஆனால் எனக்கு இதுவரை அது ஏன் என்று தெரியவில்லை. சிலவேளை உள்ளே புகின்ற நாம் செருப்பை விடக் கேவலமானவராக இருக்கலாம் அல்லது கடை உரிமையாளர்கள் எமது செருப்புக்களை எம்மை விட மதிப்பதாகவும் இருக்கலாம். ஏனென்று எம் எல்லொருக்கும் தெரியம். அப்போது நான் எனது செருப்பினை மிகவம் மரியாதையுடன் கழற்றிக்கொண்டிருந்தேன்....அப்போது அங்கு வந்த ஒருவர் அதனை உறுதிப்படுத்தினார். அவர் செருப்பினை கழற்றி வைத்துவிட்டு அதன் மீது தனது கையிலிருந்த பையினை வைக்க முயன்றார். அப்போது இதனை கண்காணித்துக் கொண்டிருந்த புத்தகடையில் வேலை செய்கின்ற ஒருவர் 'அதனை மேசையில் வையுங்கள்' என்று கூறினார். அப்போது அந்த மனிதர்.. 'இல்லைஇ இதனை இங்கு வைத்தால் செருப்பு பாதுகாப்பாக இருக்குமே' என்று நினைத்தேன் என்று பதிலளித்தார். அப்போது சற்று உள்ளாலே சிரித்துக்கொண்டு பையை சற்று கடைக்கண்ணால் நோட்டமிட்டேன். அது வேறு ஒன்றுமில்லை......இ பையிலிருந்தவை இரவுச் சமையலுக்காக வாங்கிய காய்கறிகள்தான். இப்போது விளங்குகிறதா யாருக்கு எது முக்கியம் என்று. ஓவ்வொருவருடைய பர்வையும் அவர்களுடைய சிநத்தனைகளும் எப்படி வேறுபட்டாலும் எல்லோரும் ஒரு வகையில் ஒற்றுமையானவர்கள்தான். அது எப்படி? நான் ஏற்கனவே இங்கு கூறிவிட்டேன். நீங்கள் வாசித்து பாருங்கள்.அல்லது ஓவியத்தையாவது பாருங்கள்.............................................