எனக்கு நண்பனல்லா ஒருத்தன்

இரவு சுமார் 11.40 மணியிருக்கும் எனது நண்பன் (அல்லாத) ஒருவனிடத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. இந்தக் கீறல்கள் கிறுக்கல்களை யார் எழுவது எனத்தான் அவன் என்னிடம் கேட்டான். நானும் அவனிடம் இந்தக் கேளவிக்கு என்ன காரணம் என வினவினேன். அவன் தலைப்புக்கள் யாவும் ஏதோ பாதிக்கப்பட்டு எழுதுவது போன்று இருக்கிறதே! எதிர்மறைத் தலைப்புக்களாக இருக்கின்றதே! அதனால்தான் யார் எழுதுவது என்று கேட்டேன் என்றான். இதனைத்தொடர்ந்து அவன் அந்த தலைப்புக்களை படித்துக் காட்டியபோது நானும் அவனிடம் அதன் உள்ளிருக்கின்ற விடயங்களை வாசித்துப் பார்த்தாயா என்று கேட்டேன். அவனும் இல்லை என்று கூறினாhன். மேலும் அவன், தொடராக எழுதப்படுகின்ற விடயத் தலைப்புக்களை ஒன்றோடொன்று பொருத்திப் பார்க்கின்ற வேளை அவை மிகவம் தெளிவாக பாதிக்கப்பட்டுள்ளதனை காட்டுகின்றது எனவும் கூறினான்.

இந்த சம்பவத்தின் பின்புதான் நானும் தலைப்புக்களை ஒன்றன் பின்பு ஒன்றாக வாசித்தேன். அவ்வாறான ஒரு அர்த்தம் தொணிபப்பட்டதுதான் என்றாலும் என்னுடைய கருத்து அவ்வாறாக இருக்கவில்லை. மாறாக, வேறுபட்டிருந்தது. இந்தப் பக்கத்தின் முழு முயற்சியுமே எனது வாழ்ககையின் நடவடிக்கையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களையும், வேறுபட்ட நிலமைகளையும் அதோனோடு ஒன்றியிருக்கின்ற பாடங்களையும் நான் எவ்வாறு விளங்கிக் கொண்டேன் என்பதனை அப்படியே முழுமையாக கூறிவிடுவதுதான். அதாவது, இங்கு குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் நான் அதனால் பாதிக்கப்பட்டதனால் வெளிப்படுபவையல்ல, மாறாக என்னை அவை கருத்தியல் வாயிலாக பாதித்ததனால் வெளிவருபவை. அனால் அவை என்ன வகையான பிரச்சினைகளாகவும் அல்லது படிப்பினை தரும் நிகழ்வுகளாகவும் இருக்கலாம். சிலவேளை அவற்றில் உங்களுக்கு படிப்பினை இல்லாமலிருக்கலாம் அல்லது உங்களுடைய கருத்துக்கள் சந்தேகங்கள் இருந்தால் அதனையம் நீங்கள் எனக்காக இங்கு தெரிவிக்கலாம். இந்த கோப்புகளின் இறுதியில் அதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதே!. தவறில்லை. காரணம், அவை சூழல்களைப் பொறுத்து, சிந்தனைகளைப் பொறுத்து வேறுபடலாம்.

பொதுவாக நாம் எதனையும் மேலெழுந்தவாரியாக எடை போட்டு விடக்கூடாது. அதன் உள் என்ன இருக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் அவ்வாறு சிந்திப்பதற்கு முக்கிய காரணம், நாம் பிறரை குறைவாக மதிப்பிடுவதும், எதிர் மறையான சிந்தனைகளை அவர்களின் பால் முதலில் வெளிப்படுத்த ஆரம்பிப்பதும்தான். இந்நிலமை எவ்வாறானது என்றால், எமது ஊகம் இவ்வுலகில் வாழ்கின்ற யாவும் எதிர்மறை ஆற்றலுடையது என்பதுதான். ஆனால் யதார்தத்தில் அவ்வாறன்று. இவ்வுலகில் ஜீவிக்கின்ற யாவும் மகத்துவமானது, நேரியல்பு கொண்டது என்று நாம் சிந்திப்போமானால் அது எமது வாழ்க்கையினை இன்பமாக வைத்துக்கொள்ள அலாதியாயிருக்கும். என்னடா இவன், நேற்று சாகப் போகிறானாம் என்று கூறிவிட்டு இன்று கதையளக்கிறான் என்று கூறுவீர்களானால் நான் தற்போதும், எப்போதும்; கூறுவது என்னவென்று இன்னும் நீங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்பதுதான் பொருள்.

இப்படித்தான் இன்றும், எனது மாணவர்களுக்கு குறித்த பாடம் தொடர்பாக புத்தகம் ஒன்றிலிருந்து இரு அத்தியாயங்களை வாசிப்பதற்காக பரிந்துரை செய்ய வேண்டியிருந்தது. இதனால், அவற்றை அவர்களுக்கென பிரதி எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன். அவர்கள் ஆறுபேர் இருக்கின்றார்கள் என்பதனால், வழமையாக  இத்தகைய பிரதிகள் ஆறினை அவர்களுக்காக அவர்களுடைய மேசையில் வைத்துவிட்டுத்தான் விரிவுரையே ஆரம்பமாகும். இன்று அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகத்தில் இரு அத்தியாயங்கள் வேறு வேறாக பிரதி பண்ணவேண்டியிருந்ததனால், நானும் புத்தகத்தின் அட்டைப் பகுதியினை பிரதி செய்து இரு அத்தியாயங்களினதும் முன்பகுதியில் சேர்த்திருந்தேன். ஆனாலும், மேசையில் வைக்கின்ற போது வழமை மாதிரி வேறுவேறாக அவர்கள் இலகுவாக எடுத்துக்கொள்ளவென வைத்துவிட்டேன். ஆனால், அவர்களில் சிலர் நான்காம் அத்தியாயத்தின் பிரதியினை எடுத்துவிட்டு, ஆறாம் அத்தியாயத்தினை எடுக்காமல் விட்டுவிட்டனர். முற்றவர்கள் ஆறாம் அத்தியாயத்தினை எடுத்துவிட்டு நான்காம் அத்தியாயத்தினை எடுக்காமல் விட்டுவிட்டனர். அப்போது நான் அவர்கிளிடம் ஏன்? மற்றயதனை எடுக்கவில்லை எனக் கேட்க, அவர்களும் பதிலுக்கு இரண்டும் ஒன்றுதானே அதனால் ஒன்று போதும் என்றார்கள். அவர்கள் கூறிய காரணம், பிரதிகளின் முன் இணைக்கப்பட்டிருந்த புத்தகத்தின் முன் அட்டையினை கண்ணுற்றுவிட்டுத்தான் அத்தகைய முடிவுக்கு வந்தனர்.

இந்நிகழ்வினை நாம் அவதானித்தால், அவர்கள் நான் அறியாமல் அவர்களுக்கென ஆறு பிரதிகளுக்கு மேலதிகமக இன்று பிரதிகளை கொண்டு வந்துள்ளேன் என இயல்பாக அவர்களுடைய மனம் எடைபோட்டுவிட்டது. அவ்வாறில்லாமல், இவ்வாறான தவறு நடக்க ஏது இல்லை, நாம் சற்று உள் சென்று இரண்டு பிரதிகளிலும் அப்படி என்னதான் இருக்கின்றது என்று பார்ப்போம் என்று அவர்கள் சற்று சிந்தித்திருந்தால் இப்படி இன்று நடந்திருக்காதல்லவா. இப்படித்தான் நாமும் மேலெழுந்தவாரியாக பிறரைப் பற்றி எடைபோட்டு விடுகின்றோமே, அவர்களைப் பற்றி சடுதியானதும் மிகவும் பாரதூரமானதுமான தீர்மானங்களை எடுத்துவிடுகின்றோமே, அது ஏன்?

இதற்குக் முழுமுதற் காரணம் நாம் எமது உறவில் வைத்திருக்கின்ற நம்பிக்கையும் அதன் ஆழத்தில் இருக்கின்ற குறையும்தான். இவைகளினால் எமது சிந்தனையும் மந்தமாகவே முடிவெடுக்கும் படியாக இசைவடைந்துள்ளது. எனவே எமது உறவுகள் ஐக்கியப்படுகின்ற வேளை அங்கு புதியதொரு நம்பிக்கையுண்ணடாக்கப்பட்டு, ஏற்படுகின்ற மாற்றமானது சிந்தனையிலும், எண்ணங்களிலும் ஏற்படுவதனால்தான்  எமது செயற்பாடுகள் நேர்த்ன்மையுடையதாக மாறும், மாற்றப்படக் கூடியது என்பது எனது கருத்து. எனது நண்ப(அல்லாதவ)னுக்கு இவ்வளவு விளக்கம் தேவையில்லை. எனென்றால் அவனுக்க அறிவிருக்கின்றது என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இந்த உறவினைப் பற்றி கண்ணதாசனும் மிக அழகாக அவருடைய கவிதையொன்றில் குறிப்பிடுவது தற்போது எனக்கு நினைவுக்கு வருகின்றது. அதன் ஆழம், ஊற்று மிகவும் கனதியானதும் வேகமாகவும் இருப்பதனை நீங்களும் உணர வேண்டும் என்பதற்காக தருகின்றேன் படியுங்கள்.....


குழந்தை பிறந்தது;

பிறந்ததும் அழுதது;

வளர்ந்தது: வாழ்ந்தது: இறந்தது;

சுற்றியிருந்தவர்களெல்லாம் அழுதார்கள்.

பிறப்பு தான் அழுதது.

பிறப்பு, பிறரை அழவைத்தது.

ஒவ்வொரு அழுகையிலும் உறவு நின்று சிரித்தது.

அழுத குழந்தை தன்னை அணைக்கும் கைகளை பரிந்து கொண்டது.

உலகம் தெரியாது, பேசவும் தெரியாது.

ஆறு மாதக் குழந்தையானது.

பிறர் தூக்கினால் ஓலமிட்டது.

தாய் தூக்கினால் அமைதி கொண்டது.

நினைவு பிறப்பதற்கு முன்னாலேயே உறவு தெரிந்து விட்டது.

அறிவு தெரிவதற்கு முன்னாலேயே உறவு தெரிந்துவிட்டது.

பாம்பு கடிக்கும் என்பது தெரியாமல் தொடுகிறது.

ஆனால்,

தாயின் கரங்களுக்கும் பிறருடைய கரங்களுக்கும் பேதம் மட்டும் தெரிகிறது.

அறிவிலே மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் எல்லோருமே ஒன்றாக இருக்கிறார்கள்.

சிந்தனைக்குத் தொடர்பில்லாத ஓர் உணர்ச்சி.

குருதி நாளங்களில், மயிர்க்கால்களில் பரவி விரவி நின்று கொள்கிறது உறவு.

"அதோ அந்த விட்டில் யாரோ செத்துப் போனார்கள்" என்று சொன்னேன். கேட்டவன் "ஐயோ பாவம்!" என்று சொவிட்டுத் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான்.

"இறந்தவன் உன் மகன்தானாம்" என்றேன் "ஐயோ அம்மா!" என்று அலறினான்; முட்டிக் கொண்டான்; மோதிக் கொண்டான்.

நடைபெற்றது ஒரே சாவுதான்.

யாரோ என்றால் கண்ணீர் வரவில்லை; உறவு என்றால் ஓடோடி வருகிறது.

உறவுகள் இல்லையேல் வாழ்வில் பிடிப்பு இல்லை.

சிரிக்கும் போது சிரிக்கும் உறவில் அழுத்தம் இல்லை.

அழும் போது சேர்ந்து அழும் உறவில் நெருக்கம் இருக்கிறது.

வசதியான வாழ்க்கை நெருக்கமான பிணைப்புக்களை அறுத்துவிடுகின்றது.

தொல்லைகளும் துயரங்களும் ஒரு கைக்கு ஆறு கைகளை உரமாக்குகின்றன.

சுமையைத் தாங்கத்தான் சாலைகளில் சுமைதாங்கிகள் இருக்கின்றன.

சுகத்தை தாங்க 'சுகதாங்கிகள்' இல்லை.

காதலால் வளையும் உறவு, பருவங் கொண்ட பயிரைப் போல் அறுவடையாகிவிடுகிறது.

பணத்தால் வரும் உறவு, பணம் போகும் போது தானும் போய்விடுகின்றது.

செல்வாக்கில் வரும் உறவு செல்வம் தேயும் போது தானும் தேய்ந்துவிடுகிறது.

பிறப்போடு வரும் உறவும், வாழ்க்கை வசதிகள் பெருகினால் சிதைந்து விடுகிறது.

பாசத்திலும் ஆசையிலும் வரும் உறவு பழுதுவடுவது நடக்கிறது.

ஆனால் அவலத்திலும், ஓலத்திலும், துயரத்திலும் வரும் உறவு தியாகத்தோடு வருகிறது.

பலவீனத்தில் இருக்கும் பிணைப்பு, பலத்தில் இல்லை.

யாருக்கா அழுதாலும் ஆறுதல் இருக்கிறது.

சிரித்துக் கொண்டே வாழ விரும்பும் மனிதர்கள், அழுது கொண்டே நெருங்கிக் கொள்ள வேண்டும்.

பிறந்துவிட்டோமே என்று அழுகிறவன் கண்ணுக்கு துறவு தெரிகிறது.

என் கண்ணுக்கு உறவு தெரிகிறது. (கண்ணதாசனின் நூலிலிருந்து)



0 comments:

Post a Comment