வாழப் பிடிக்கவில்லை சாகப் பிடித்திருக்கிறது.

இப்படித்தான் இரவு முழுக்க என்னுடைய எண்ணச் சிதறல்கள் இருந்தன. எல்லாம் ஒரேயொரு காரணம்தான் வாழப் பிடிக்கவில்லை பாருங்கள். காலையில் எழுந்ததும் இந்த சிந்தனை என்னை மீண்டும் ஆட்பரித்துக் கொண்டது. ஏன் என்று எனக்குப் புரிகின்றது. தற்போது இதனை எழுத ஆரம்பித்த கனப் பொழுதில் ஒரு நுளம்பு என்னை பதம் பாhத்துவிட்டு திரும்ப முனைந்தது. நான் என்ன சும்மா விட்டுவிடுவேனா? என்னை பதம் பார்த்த அந்த நுளம்பை அதே கனத்தில் அடித்து சாகடித்து விட்டேன். அதற்கும் சாகப் பிடித்திருக்கின்றது. தற்போது இதனை எழுதிக் கொண்டிருப்பது இரத்தம் தோய்ந்த கைகளுடனும், கொலை செய்த பாவியாகவும்தான் என்பதனை நீங்கள் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். எத்தனை கல் நெஞ்சாக இருப்பினும் அதனுள்; இருக்கும் ஈரம் சிலவேளைகளில் வெளிப்படத்தான் செய்கிறது.

காலையில் வெளியே புறப்பட்டு வீதியில் சென்று கொண்டிருக்கும் வேளை திடீரென ஒரு துவிச்சக்கர வண்டியில் ஒருவன் என்னை கடந்து மிகவும் வேகமாகச் சென்ற மாத்திரத்தில் ஒரு வேன் குறுக்கே வந்ததனால் சடுக்கென நிறுத்த முனைந்தான்;. பாவிப்பயல் மயிரிளையில் தப்பி விட்டான். அவனுக்கும் சாகப்பிடித்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறே வழியில் சென்று கொண்டிருக்கையில் பாரியளவில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை ஒன்றை சற்று எனது கண்களையும் மனதையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது. அதில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களும் வடிவமைப்பும் எனது உள்ளத்தனை சற்று பதம் பார்த்தது. அது உண்மையில் வர்ணப் புச்சுக்கான விளம்பரம். அந்த விளம்பரத்தில் ஒருவர் கதிரையில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கின்றார். அருகில் ஒரு வர்ணப் பூச்சு வாளி ஒன்று இருக்கின்றது. அத்தோடு அங்கு எழுதப்பட்டிருந்த வாக்கியம் 'கவலை வேண்டாம், இந்த மதில் சுத்தமாக்கப் பட்டிருக்கும்'. (டியுலக்ஸ் வர்ணப் பூச்சுக்காக பேஸ்லைன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகையில்தான் இவை காணப்படுகின்றன.)

வாழ்விலும் இப்படித்தான் நடைபெறுகின்றது. இந்த உலகில் எமக்கு கிடைக்கின்ற கவலைகளும், இழி சொற்களும், அவமானமும், ஏமாற்றங்களும், பித்தலாட்டங்களும், மாத்து நொடிகளும், ஏச்சுக்களும், பேச்சுக்களும்தான் அந்த வர்ணப் பூச்சு வாளியில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட நான்தான் அந்த ஆசனத்தில் சோகமாய் அமர்ந்து கொண்டிருந்தேன். இங்கு எழுதப்பட்டிருந்த வாக்கியம் எனக்குத்தான் அப்போது முழுமையாக பொருந்துகின்றது பாருங்கள். 

என் மீது வீண் பழிகளையும், இழி சொற்களையும் தீட்டுகின்ற இவர்களுக்கு மட்டும் என்ன நல்லதா நடக்கப் போகின்றது. இப்படி இவர்கள் செயற்படுவதனால் என்னுடைய பாவங்களும், என்னுடைய செயற்பாடுகளும் தானே அதனூடாக செழிப்படையப் போகின்றது, தெளிவடையப் போகின்றது, சுத்தம் செய்யப்படப் போகின்றது என்பதனை இவர்கள் உணர்ந்து கொண்டால் சரி. இதனை இவர்கள் உணராமல், என்னுடைய கற்பனைகளையும், கதாபாத்திரத்தினையும் மறந்து, அதன் மாற்றங்களில் இருக்கும் நிகழ்வுகளை பொருட்படுத்தாது  இவர்கள் என்மீது வீசியெறிகின்ற பழிகளுக்கு மத்தியில், குற்ற உணர்ச்சியுடன் என்னால் வாழ முடியாமல் நான் தவிக்கின்ற நொடிகளை இவர்கள் எப்போவாவது சிந்தித்திருக்கின்றார்களா? இல்லை. இவர்கள் இவ்வாறான ரணங்களை அனுபவித்தது கிடையாதா? வாழ்வின் சொல்லொணா துயரங்களை எத்தனை காலத்திற்கு பொறுமையோடு இப்படிக் கழிக்க முடியும் எம்மால். இதனால் எனக்கு வாழப்பிடிப்பது கிடையாது, ஆனால் சாகப் பிடிக்கின்றது. ஏன்றாலும், அங்கும் இந்த வர்ணப் பூச்சு முடிந்துவிடாது என்கின்ற ஐயமும் இருக்கின்றதே! அதுதான் இவர்கள் என்னுடைய சாவுக்கும் அர்த்தம் சொல்வார்கள், காரணம் கற்பிப்பார்கள் என்ற தெளிவு எனக்குள் சிக்குண்டு தவிர்க்கின்றது.

இப்படியொரு எழுத்து நான் எப்போவோ எழுதியது, இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது கேழுங்கள்....

எனது எண்ணச் சிறகுகள் 
அகல விரிக்கும் போது – வந்த
எறும்புகள் கடித்து,
இதயம் நின்றுபோனதே என்னுயிரே!

இது எனது ஹைக்கூ'வாக இருக்லாம். பல அர்த்தங்களை இவ்வசனங்கள் தாங்கி நிற்கலாம். ஆனால் தற்போது எனது நிலமை இறுதிக் கட்டமாக கூட இருக்கலாம்.

சிலர் நினைக்கின்றார்கள் இவ்வாறு வாழ்கையை விட்டு ஒதுங்க நினைப்பது கோழைத்தனம் என்று. ஆனால் அதன் அர்த்தம் நிச்சயமாக அதுவல்ல. வாழ்க்கையினை மற்றவர்களுக்கு விட்டுவிட்டு நாம் மெல்ல ஒதுங்கியிருக்க நினைப்பது வாழ்வில் எமக்கு ஏற்படுகின்ற பக்குவம் என்பதுதான் எனக்குப் புரிந்தது. இவ்வாறு பக்குவமாக ஒதுங்கியிருப்பது அவரவர் எதிர்பார்க்கும் பக்குவத்தினையும் அதன் வீச்சினையும் பொறுத்தது, வேறுபடலாம். அந்தப் பக்குவத்தின் மூலம் இந்த உலகத்தின் எல்லாவற்றனையும் விட்டுவிட்டு ஒதுங்கியிருக்க ஒருவர் விரும்பினால், அது அவருக்கு இவ்வுலக வாழ்க்கை அளித்த பரிசு என்றுதான் நான் நினைக்கின்றேன். காரணம் அதுதான் அவன் வெற்றியினை தேடி பயணிக்கும் உச்ச கட்டம். அத்தகைய மனிதனினால் எவருக்கும் நன்மை இல்லாவிட்டாலும், ஏன் இவ்வுலகுக்கே நன்மை ஏதும் இல்லாவிட்டாலும், அவனால் இந்த உலகத்திற்கு எந்தவொரு தீங்கும், தீமையும் இளைக்கப்படவில்லை என்பதனை நினைக்கின்ற வேளை எனக்கு அவனைப்பற்றி பெருமையாக இருக்கின்றது. ஏனெனில், அவனால் என்னுடய வாழ்விற்கோ, என்னுடைய செயல்பாடுகளுக்கோ எதுவித இடையூறுகளும், இடைஞ்சல்களும் இல்லையல்லவா?

இதனால்தான் சிலருக்கு வாழ்வதை விட சாகப் பிடிக்கின்றது, இன்னும் சிலருக்கு வாழ்ந்து மாளப் பிடிக்கின்றது. சாகப்பிடிக்கின்றவர்களுக்கும் காரணம் இருக்கின்றது. அதாவது, இதனையும் நான் ஒரு தடவை எழுதியிருக்கின்றேன்....

யாருமே இல்லாத
இடமொன்றிற்கு செல்ல வேண்டும்,
அது அடர் வனமாக,
இருள் குகையாக,
எதுவாகவும் இருக்கட்டும்.
ஆனால் ஒரேயொரு பிரச்சினை,
என்னை விட்டுவிட்டு எப்படிச் செல்வது?

இதற்கு உங்களால் விடைகாண முடிந்தால், விடையளிக்க முடிந்தால் நீங்கள் கூறுகின்ற மாதிரி நான் வாழக் கற்றுக் கொள்கின்றேன். இல்லாவிடில்.....? வேறுவழியில்லை விட்டுவிடுங்கள். 

எனது வாழ்க்கைத் துணை..., 

என்னால் சரியாகக் கூற வார்த்தைகள் கிடையாது,
நானும் சிறிது சிறிதாக
காலக்கனதியுடன் சேர்ந்தே,
கரைந்து போகின்றேன்.

இப்படி ஒரு காதல் கிடைக்குமா என்று எனக்கு தெரியாது,
உலகத்தின் கூச்சலுக்கும்,
குழப்பங்களுக்கும் மத்தியில் - நீ
நான் இழந்தேன்.

நான் இறைவனை ஒன்று கேட்க வேண்டும்,
நான் வேண்டியது – உன்னைத்தான்,
என்று அவனிடம் கூற வேண்டும்.

வாசலை எதிர்நோக்குகின்ற வேளை,
இதயத்தின் குதிப்பு துடிப்பாகின்றது.
காரணம் எனக்குத் தெரியும்,
கூடவே வருவது நீ மட்டும்தான்.

எமக்கு இரட்டைக் குழந்தைகள் கிடைத்தாலும்,
எந்தவொரு சீதோசனத்தையும்,
எதிர்த்து நிற்கும் ஆற்றல் எமக்குண்டு என்பதும்
எனக்குத் தெரியும்.

எப்போதும் இருப்பது போலவே,
சுவனலோகத்தில் இருப்பதற்காக,
நான் உனக்காகவும் எனக்காகவும்
வேண்டுகின்றேன்.

எனது காதல் உனக்காக எப்போதும் இருக்கும்,
எனது இதயத்தின் திறவுகோலை – நீ
வைத்திருக்கின்றாய்.
நீ அதனை திறந்தாய்,
இனியெப்போதும் - நாம் 
ஒரு பகுதியாக குடித்தனம் நடத்த முடியாது. 

எனது கண்கள் கண்ணீரின் கனதியால்,
ஆனால் நான் அழப்போவது கிடையாது,
இன்னும் - நான்
சா வந்து பீடிக்கும் வரை காத்திரவும் முடியாது.

மிக அவசரமாக அது நடந்தேறும்,
மிகவும் அவசரமாக,
இறைவனின் திருப்பொருத்தத்தினால்,
எனக்கும் உனக்கும்.

0 comments:

Post a Comment