அதிஷ்டமா? துரதிஷ்டமா?


அதிஷ்டமா? துரதிஷ்டமா என்று தெரியவில்லை. இன்று நடந்தன எல்லாம் தொடராக சிந்திக்கச் செய்தது என்னை. கிண்டலெல்லாம் வேண்டாம். எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் கூறி மொக்குத்தனமாக கதைக்க வேண்டாம். கூற வந்ததை கூறு என்று முனுமுனுப்பது எனக்குத் தெரிகிறது. கூறுகின்றேன் கேளுங்கள். இன்று பேசவிருப்பது பெண்கள் தொடர்பான விடயம். சிலருக்கு இரசனையாகத்தான் இருக்கும், ஆனாலும் அவ்வளவு இரசனையில்லை. இரசனை என்பது அவரவர் நிலமைக்கு வேறுபடுவதாயிற்றே. அதனால் நான் எப்படிச் சொல்வது இது இரசனையா? இல்லையா? ஏன்று. ம்.... கேளுங்கள். அதுதான் இன்றும் சொல்லவே இல்லையே....!

இன்று காலை வழமை போன்று போகும் இடமொன்றிற்கு சென்றேன். அது எங்கு என்றெல்லாம் எல்லாருக்கும் கூறத்தேவையில்லை என்பதனால் கூறவில்லை. அதெல்லாம் சிலருக்கு விளங்கும். அந்த இடத்தை அண்மித்த வேளை என் முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு (அழகான?) பெண்களில் ஒருத்தி ஏதேதோ செய்து கொண்டு சென்று கொண்டிருந்தாள். அப்படியே அவளுடைய நண்பியுடனும் கதைத்துக் கொண்டுதான் சென்று கொண்டிருந்தாள். இதையெல்லாம் நான் ஏன் அவதானிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். பொறுத்திருங்கள் விளங்கும். இதற்கிடையில் இன்னொருபிரச்சினை இங்கே என்னை சிக்கலுக்குள்ளாக்குகின்றது. அப்படி அவள் கதைத்துக் கொண்டு செல்கையில் திடீரென்று அவளது தலையில் இருந்த ஒன்று கீழே விழுந்து விட்டது. பொறுங்கள் கூறுகின்றேன் என்னவென்று. சும்மா ஏடாபுடமா எதையாவது நினைத்துக்கொள்ள வேண்டாம். விழுந்தது நிச்சயமாக அவளுடைய முடியில்லை. அவ்வளவுக்கு எனது கண் கூர்மையானதுமல்ல, அப்படி பார்க்கும் அனுபவமும் எனக்கில்லை. சட்டென கீழே கிடந்த அப்பொருளை நோக்கி கண்ணுற்ற அவள், பின்னால் வந்த என்னை பார்த்து விட்டு, எடுக்க எத்தணித்த அவளுடைய நண்பியினையும் தட்டிவிட்டு, இருவருமாக சென்றுவிட்டனர். பின்னால் வந்த நான் அந்த கீழே கிடந்த பொருளை தாண்டி எனது பக்கமாக சென்றுவிட்டேன். நான் சற்று தூரம் சென்ற பின்பு மீண்டும் வந்த அந்த இரண்டும் (?) அதனை எடுத்துக் கொண்டு சென்று விட்டது. இதனையும் நான் அவதானித்துக் கொண்டுதானிருந்தேன். நான் எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்கு புரிகின்றதா? என்றாலும் அவர்கள் அதனை ஏன் விட்டுவிட்டு சென்றார்கள்? பின்பு வந்து ஏன் எடுத்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. 

இப்படி சிந்தித்துக் கொண்டே மீதி தூத்தை அடைந்த எனக்கு எனது நண்பர் ஒருவர் உளவியலாளர் இருக்கின்றார். அவருடன் நெருக்கமாக பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு அண்மையில் கிடைத்தது. அவர் ஒரு நாள் என்னிடம் பெண்களைப்பற்றி கூறிய விடயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவர் கூறியது இதுதான். 'பெண்கள் பல நேரங்களில் எதனைப் புரிகின்றார்கள்? ஏன் புரிகின்றார்கள்? என்பது அவர்களுக்கே தெரியாத விடயம். அவர்களின் செயற்பாட்டின் பின்னணியில் எந்தவொரு நியாயத்தினையும் எல்லா நேரங்களிலும் கண்டுகொள்ள முடியாது'. இதனை ஞாபகப்படுத்திக் கொண்ட பொழுதுதான் எனக்கு சிறிது ஆறுதல் ஏற்பட்டது. 

மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்ற வேளை, வீதியில் சிவப்பு விளக்கிற்கு நின்று கொண்டிருந்தேன். சிவப்பு விளக்கு எனக்கு மட்டுமா ஒளிரும்? நான் மட்டுமல்ல பலரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்மணி எம்மத்தியில் மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்து, பச்சை விளக்கு ஒளிரும் வரை தரித்து நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்ணுற்ற நான் 'இப்போதெல்லாம் பெண்களும் தைரியம் பெற்றுவிட்டார்கள்' என்று நினைத்துக் கொண்டேன். அப்பெண் முஸ்லிம் பெண்மணி ஒருத்தியாக இருந்ததனால்.... பெண்களுக்கு இஸ்லாம் உரிமைகளை சரிவர வழங்குவதில்லை எனக் கூறுபவர்களுக்கு இவள் ஒரு எடுத்துக்காட்டு எனவும் நினைத்துக்கொண்டேன். இப்படி இருக்கையில், பச்சை விளக்கு சமிக்ஞை காட்டப்பட்;டதனால் வேகமாக நாங்கள் வாகனங்களை ஓட்ட எடுத்தோம். அப்படி நாங்கள் எடுத்த மாத்திரத்தில் திடீரென இரு உருவங்கள் நடுவில் நின்று திக்கு முக்காடியதனால் அப்படியே போக முடியாமல் தடைப்பட்டு நாங்கள் அனைவரும் சுமார் 2 நிமிடங்கள் வரை அந்த சந்தியிலே சிக்கிக் கொண்டோம். அந்த இரு உருவங்கள் வேறு யாருமில்லை. இரண்டும் பெண்கள்தான், ஒரு தாயும் மகளும், இவர்களும் முஸ்லிம்கள்தான். அது எப்படித் தெரியும் உங்களுக்கு என்று கேட்கும் சில புத்திசாலித்தனமிக்க பெண்களும் இங்கு இருக்கின்றார்கள் என்பதனால் கூறுகின்றேன். அவர்கள் ஹிஜாப் அணிந்திருந்தார்கள். வாகனத்தை வேகமாக எடுத்துக்கொண்டிருந்த வேளை இருவரும் நடுவீதியில் புகுந்திருந்ததனால் எனக்கு கோபம் அதிகமாகவே வந்தது. பின்னர் நாங்கள் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் புறப்பட்டோம்.

இப்படித்தான் பெண்கள் குறுக்காலம் மறுக்காலம்தான் வருவார்கள் என்று சிலர் இங்கு முனுமுனுப்பது எனக்கு விளங்குகின்றது. என்ன செய்வது? அவர்களின் இயல்பு அப்படி. ஏனக்குத் தெரியாது சில வேளை நீங்கள் குறுக்காலும் மறுக்காலும் வருபவர்களை கூட பெண்கள் என்று முடிவெடுத்துக் கொள்ளலாம்.

இப்படி வழியல் வந்து கொண்டிருக்கின்ற போது ஒரு பாடசலை இருக்கின்றது. அதன் மைதானத்தில் சுமார் 15 பெண் மாணவர்கள் வாத்தியக் கருவிகள் இசைத்து பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதிலும், ஒருத்தி முஸ்லிம் மாணவியாக இருந்தாள். அதே மைதானத்தில் வேறு பக்கமாக சில பெண்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு முஸ்லிம் பெண் மாணவியும் ஆடிக் கொண்டிருந்தாள். இவைகளை கண்ணுற்ற எனக்கு பெண்களின் இன்றைய முன்னேற்றம் குறித்து எழுந்த சிந்தனைகள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தன. என்றாலும் எனது மோட்டார் சைக்கிள் தேவையில்லாத விடயமாக இவைகளை கருதிக்கொண்டதோ என்னவோ! 'என்னனை வழியைப் பார்த்து ஓட்டடா' என்றது. 

சற்று மனதால் திருப்திப் பட்டுக்கொண்ட எனக்கு மறுபுறத்தில் இவர்களின் முன்னேற்றங்களை அப்படியே பொடியாக்கிவிடும் அளவுக்கு சில பெண்கள் செயற்படுகின்றார்களே என்பதனை நினைக்கும் போது சற்று கவலையாக இருந்தது. சில பெண்கள், சில வேளை பத்திசாலிகளாகவும், சில வேளை தைரியமானவர்களாகவும் இருக்கையில், இன்னும் பலர் அதனை பாழ்படுத்தவல்லவா வேலை பார்க்கின்றனர்.  

ம்.....பாருங்கள் இப்படி நான் எழுதிக் கொண்டிருக்கின்ற போது இரண்டு பெண் நெளும்புகள் இங்கு என்னை பதம் பார்த்துவிட்டுச் செல்கின்றன. பாவம் அடிக்காமல் விட்டுவிட்டேன்.

அது சரி அவளுடைய தலையில் இருந்து விழுந்ததுதான் என்ன என்று உங்களுக்குத் தெரியமா? அவளுடைய கூந்தலில் இடுக்கி மாட்டியிருந்த சுற்றி கட்டும் ஒன்றுதான். பெயர் எனக்கு சரியாக வரவில்லை. உங்களுக்கு அதெல்லாம் தெரியும்தானே. அடப் பாவி இதெல்லாமா நீ பாக்கிறது? அது எப்படி நீ மட்டும் பெண்கள் இருக்கிற பக்கமாக வாறது? போறது? என்றெல்லாம் கூறுவதனை விட்டுவிட்டு கூறிய விடயத்திலிருக்கின்ற பாடத்தை மட்டும் எடுங்க.

நான் இங்கு அதிஷ்டமா? துரதிஷ்டமா? என்று கேட்டதற்கு காரணம். இன்று இத்தனை விடயங்களை, அதுவும் பெண்களை சந்திக்கவும், சிந்திக்கவும் வேண்டியிருந்ததே! அதுதான். கொடுமையா அல்லது கடுமையா என்று நீங்கள் பரிதாபப்பட வேண்டாம். அது முடிந்துவிட்ட விடயம்தானே! இனியாவது நல்லது நடக்கட்டும். எனக்கும்தான். வேறு எதுவாகவும் நீங்கள் உணர்ந்தால் அது உங்களுக்கு.

உங்களுக்கு தெரியுமா இந்த உலகில் எல்லாம் ஒரு பாடம்தான்....

நாம் இந்த அழகான
பிரமாண்டமான உலகில்
எமது இமைகளை அகல விரிக்கின்ற போது,
அதன் உன்னதத்தினை,
அதன் அற்பதத்தினை,
நாம் இரசிக்கின்றோம்.

இயற்கையின் ஒவ்வொரு மூலை முடுக்கும்
அழகென்று வர்ணிக்கப்படுகின்றது.
அதன் எல்லா தொழிற்களும்
ஆற்ற முடியாத கடமைகளை புரிகின்றன.
"இறைவா!
எல்லாம் எப்படி அழகானது"
 
நீலக் கடல்,
நட்சத்தரங்களின் மினுமினுப்பு,
நீண்டு பரந்து கிடக்கும் இந்த வானம்,
வாழ்கின்ற - இந்த
இயற்கையின் பூச்சி புழுக்கள்,
சந்தேகமற எல்லாம் அழகானவைதான்.
பிரம்மிக்க வைக்கு இயற்கையின் கலையுணர்வு,
மாறுபட்ட,
வியக்க வைக்கும் பொக்கிசங்கள்,
எல்லையற்ற மெய்மதி,
உயர்ந்து நிற்கும் சக்தி,
இறiவா! நீ இருக்கிறாய்.

இப்படி....,
நான் காண்கின்ற யாவையும்
எப்படி அழைப்பது?
இயற்கையின் அழகென்று.
ஐயகோ!
அந்த பரம் பொருளின் அழகை.

ஆக.... எனக்கு நடந்தது அதிஷ்டம்தான்.

0 comments:

Post a Comment