அழகும் ஆபத்தும்

நீங்கள் நினைக்கலாம் இன்று மிகவும் அழகான தலைப்பாக இருக்கின்றதே என்று. உண்மைதான், காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது. தத்துவார்த்தமாக கூறினால், காரணமில்லாமல் காரியம் இடம்பெறாது. நிகழ்வொன்று இடம்பெற காரணம் இருந்தே தீரும். இதனைத்தான் எமது மதிப்புக்குரிய முன்னோர்கள் 'சோழியண்ட குடும்பி சும்மா ஆடாதுடா' என்று கூறினார்கள் என்று நினைக்கின்றேன். உங்களுக்கு வேறு காரணங்களும் தெரிந்திருக்கலாம். இன்றும் சிலர் என்னடா வழமை போன்று சம்பந்தமில்லாத இரண்டுக்கிடையில் முடிச்சுப்போட்டுக் கொண்டு வழமையான பல்லவிதான் இன்றைக்கும் என்று நினைத்துக் கொண்டால் அது உங்களுடைய கணக்கு. அழகாய்த்தான் இருக்கும்.

நீங்கள் கேட்கலாம் அது எப்படி அழகு ஆபத்தாக முடியும்? என்று. முதலில் அது ஆபத்தா இல்லையா என்பதனை நாம் தீர்மானிக்க வேண்டுமானால், அழகு என்றால் என்ன என்பதனை நாம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமல்வா. இங்குதான் இந்த நச்சரிப்பு ஆரம்பிக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். பல்வேறு சந்தேர்ப்பங்களில் நாம் இது அழகான ஒன்று அல்லது அது அழகாக இருக்கின்றது என்று பலதையும் பார்த்து கூறியிருக்கின்றோம். ஆனாலும், நாம் அப்படி அழகென்றால் என்ன என்று சிந்தித்தது மிக மிக குறைவுதான். நானும் பலரிடம் அழகென்றால் என்ன என்று கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதில் தருவதற்கு எந்தவொரு தகவலும் இருந்தது கிடையாது. சிலர் அழகென்றால் அழகுதான் என்று வழுகிவிடுகின்றனர். இன்னும் சிலர் அது வர்ணிக்க முடியாதது என்று கூறிக்கொண்டு அவர்களை விட்டும் அழகென்பதனை தூரமாக்கி விடுகின்றனர்.

ஆப்படியென்றால் அழகென்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? என்னைப் பொறுத்தவரையில் அழகென்பது ஒன்றுமில்லாதது. வெறும் போலியான ஒன்று. இப்படியும் சிலர் அவசரப்பட்டு கூறுவதுண்டு. ஆனால் என்னுடைய கூற்று இந்த கருத்தேற்பில் அல்ல. மாறாக , அழகென்பது 'எமது புறக்கண் காண்பதனை அகக் கண் ஏற்றுக்கொள்வதாகும்' என நான் இங்கு மிக எளிமையாக உங்களுக்குத் தருகின்றேன். அகக் கண் என்பது எமது உள்ளத்தினை அல்லது நாம் மனம் என்று கருதுகின்றோமே அதனை குறிப்பிடுகின்றது. புறக் கண் என்பது வேறு ஒன்றுமில்லை எமது இரு கண்களும்தான். ஆனால் கண்களிரண்டும் மட்டும்தான் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது. அங்கு மேலும், பல புறச் செயற்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றினை உணர்ந்து கொள்ளும் ஆற்றலோ அல்லது அறிவோ எமக்கு மிகவும் அரிது. ஊணர்ந்து கொண்டாலும் அவை பெரும்பாலும் சரியான கணக்காக இருப்பது ஐயம்தான்.

அழகென்பது எமது மனத்தினால் ஏற்றுக் கொள்ளபடுவன. அது மற்றவர்களுக்கு அழகற்ற ஒன்றாகவும், அருவருப்பானதாகவும் இருக்கலாம். ஆனால் அந்த மனத்திற்கு அது அழகெனத் தோன்றும். அவதானித்துப் பாருங்கள், நீங்கள் உண்கின்ற உணவைத்தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற எல்லோரும் உண்ண வேண்டும் என்கின்ற எந்தவொரு நிபந்தனையும் யாருக்கும் கிடையாது. நான் படிக்கின்ற புத்தகத்தினைத்தான் நீங்களும் படிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தமும் இல்லை. இன்னும் கூறப்போனால், இந்த உலகத்தில் உங்களுக்கு ஒரு பொருள் பிடிக்காததன் காரணமாக அது இந்த உலகத்திற்கு அந்நியமான ஒன்றாக மாறியதும் கிடையாது. அதனை நாடும் மற்றும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். நீங்கள் ஜவுளிக் கடையில் பிடிக்காமல் ஒதுக்கிவிட்ட சட்டையினை  அந்த கடை முதலாளி தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டதுண்டா? இதுதான் அழகென்பது.

ஆனாலும், அதன் மறுபக்கமும் இருக்கின்றது. ஆழகென்பது ஆபத்தாகும் சந்தர்ப்பமாக கூட அது இருக்கலாம். போட்டித் தன்மையுடையதான அதன் தன்மைதான் வேறென்ன. எனக்கும் உங்களுக்கும் ஒரு பொருளைத்தான் பிடித்திருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம், யார் அதனைப் பெற்றுக் கொள்வது என்ற போட்டி ஆரம்பிக்குமிடமாக அது தோன்றிவிடுகின்றதல்லவா? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒழுக்கவியலில் இதனை வேறு முகத்தோற்றத்தில் நாம் அவதானிக்கலாம். அழகை இரசிப்பதென்பதில் தவறொன்றும் கிடையாது. ஆனால் தீண்டுவதும் நாசப்படுத்துவதும்தான் நாம் அழகிற்கு செய்யும் படுபாதக செயல் எனலாம். அழகில் போட்டித் தன்மை அதிகரித்தால் அது அசிங்கமாகிவிடுகின்றது. ஊதாரணத்திற்கு, பெண்ணொருத்தியிருக்கின்றாள். ஆவள் மிகவும் அழகானவள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவளை ஒருத்தன் நாடுகின்றான் என்றால் அது தவறல்ல. அதனை ஏதோவொரு வழியில் ஒழுக்கவியல் மதிப்பளித்து ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் அவள் ஒருத்தியினை பலர் அணுக முற்பட்டாலோ அல்லது அது நடந்தேறினாலோ நாம் அவளை விபச்சாரி என்று தூற்றிவிடுகின்றோமல்லவா? 

இதேவேளை, இந்த அழகிற்குள் சுவாரஸ்யங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் யாவருக்கும் இந்த உலகத்தில் அழகுணர்ச்சியென்பது வேறுவேறாகத்தானே இருக்கின்றன. எனக்கு பிடிக்கின்ற ஒன்று உங்களுக்கு பிடிப்பது கிடையாது. உங்களுடைய நண்பருக்கு பிடித்த ஒன்று எனக்கு பிடித்திருக்கும். இப்படி அது ஒரு பன்முகப் பாங்கில் எம் மனங்களுக்குள் ஊடறுத்துச் சென்றுள்ளன. இதனைத்தான் கடவுளின் திட்டமிடல் என்கின்றோம். அவ்வாறில்லாது போனால் இந்த உலகத்தில் எம்மால் சரிவர இயங்க முடியாது. யுதார்த்தத்தில் இந்த அழகிற்கு சக்தியுண்டு. நாம் அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்Nறூம் என்பதில்தான் நாம் கோட்டை விட்டு விடுகின்றோம். அதாவது, சில வேளை எம்மை அழகு ஏமாற்றிவிடுவதும் உண்டு. இன்னும் சிலவேளை எமது நடத்தைகளினால் அழகு பாதிக்கப்படுவதுமுண்டு. காரணம் இந்த அழகிற்கும் இடையில் புரிந்துணர்வும் சமாதானமும் ஏற்படுத்துவதில் எமக்கு பலத்த சிக்கல்கள் ஏற்படுவதனாலாகும்.

பாருங்கள் சிலவேளை நேற்று வாங்கி வந்த ஆடையினைக் கூட இன்று எம்மால் இரசிக்க முடிவது கிடையாது. சிலர் இருக்கின்றார்கள் கடைக்குச் சென்று வாங்கி வந்த பொருனை வீடு வந்ததும் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குச் சென்று மாற்றி வருவார்கள். இவை நம்முள் புதைந்துகிடக்கின்ற அழகுணர்வின் குறைபாடுகள் என்பதற்கப்பால் நாம் அழகென்பதனை சரிவர புரிந்து கொள்ளவில்லை என கருதிக்கொள்வது சிறந்த முடிவாக அiயும். எம்மால் அழகென்பதனை சரிவர புரிந்து கொள்ள முடியுமாக இருந்திருந்தால் நாம் எம்மை குழப்பிக் கொள்ளாதிருக்க முடியுமல்லவா.

வேறு சிலர் அழகை பிறருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு வெறுங் கையுடன்தான் அலைகின்றனர். இதனை அவர்கள் புரிந்து கொள்வதும் கிடையாது. உதாரணமாக, ஆடை ஒன்றினை தேர்ந்தெடுக்கும் போது அந்த ஆடை அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களல்லவா? அது யாரிடமிருந்து நீங்கள் கணித்துக் கொள்கின்றீர்கள்? உங்கள் புறத்திலிருந்தா அல்லது வேறு எங்குமிருந்தா? சிந்தியுங்கள். நீஙகள் எப்போதாவது உங்களுக்கு அழகென்று பட்டதனால் அல்லது இதனை அணிந்தால் நான் அழகாக இருப்பேன் எனக் கருதி அந்த ஆடையினை நீங்கள் வாங்கினீர்கள் என்று கூறும் வகையில் எத்தனை ஆடைகளை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள்? சற்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மாறாக, இதனை அணிந்தால் அழகாக இருக்கும் என்று நீங்கள் கருதி வாங்கிய ஆடைகளையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பொதுவாக மற்றவர்களுக்கு நாம் அழகாக தோன்ற வேண்டும் என கருதி வாங்கிய ஆடைகளை விட எனக்கு இந்த ஆடை அழகாக இருக்கும் எனக் கருதி வாங்கியன மிகமிகக் குறைவுதான். 

எம்முள் பெரும்பாலனவர்கள் மற்றவர்கள் எம்மை அழகானவர் அல்லது அழகானவள் என்று கூறவேண்டும் என்றுதான் எதிபார்த்திருக்கின்றோமே அன்றி நமக்கு நாமே அழகாக இருக்கின்றோம் என்று திருப்பதிப்பட்டுக்கொள்ள தயாரில்லை. எனக்கு இது பிடித்திருக்கின்றது என்பதனால் இதனை நான் அணிந்திருக்கின்றேன் என்று யாரும் கூறத் தயாரில்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அழகென்பது மற்றவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என அல்லது அதனை அவர்களைவிட்டும் தூரமாக இருக்கின்ற அறியாப் பொருளாக பொருள்படுத்திக் கொள்கின்றார்கள் என்றால் அது மிகையான கூற்றல்ல. இப்படியொன்றும் அழகு புறத்தால் நசுங்கிப் போன ஒன்றல்ல. இப்படிப்பட்டவர்கள் அவர்களின் அழகு மற்றவர்களினால் அங்கீகரிக்கப்பட பிரயத்தனம் செய்து கொண்டே இருப்பார்கள். இதனை நீங்கள் பெண்ணாக இருந்தால் அதிகம் விளங்கிக் கொள்ள முயற்சிக்கலாம். ஆனால், எவர்கள் தன்னைப் பற்றி பெருமைப் பட்டுக் கொள்கின்றார்களோ அவர்கள் மற்றவர்களிடம் அங்கீகாரத்திற்காக எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அழகாய்த்தானே இருக்கின்றார்கள்.  

இங்கு நீங்கள் அழகை இரசிப்பதோ அல்லது அதனைப் பாராட்டுவதோ தவறல்ல. அது உண்மையில் அழகாக இருந்தால் இரசிப்பதுவும் பாராட்டுவதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் அத்தகைய பாராட்டினையும் இரசிப்புதன்மையினையும் எதிர்பார்ப்பதுதான் தவறானது. ஏனெனில் அத்தருணத்தில் போட்டித்தன்மை அதிகமாகிவிடும். போட்டித்தனமை அதிகமாகிவிட்டால் அசிங்கத்தின் மொத்த உருவம் வெளிப்பட்டுவிடும். இதுதான் உண்மையில் அழகினால் ஏற்படுகின்ற ஆபத்து. இவைதான் இந்த உலகம். இதனால் அழகினால் ஏற்படுதெல்லாம் தீமைதான் என்று நான் கூறவில்லை. மாறாக, அவற்றை நாம் முறையாக கையளாவிட்டால் ஆபத்து காத்துக் கிடக்கின்றது என்பதுதான் எனது நியாயம்.

இப்படியெல்லாம் இன்று பேசவைத்தது ஒரு அழகுதான். இது நன்மையான விடயம் ஒன்றுதானே! 

நேற்று போகும் வழியில் காகில்ஸ் பூட் சிட்டி ஒன்றிற்குள் நுளைய முற்பட்டேன்;. அப்போது இரு அழகுகள் வந்த வேலையினை கவனிக்காமல் இடைக்கிடையே ஏதோ ஒன்றை அவதானிப்பது போல் எனக்கு தோன்றியது. திரும்பிப் பாhத்த வேளை அங்கு மற்றொரு மூலையில் ஒரு இளம் அழகு அதன் தாய் அழகுடன் நின்று பொருட்களை எடுத்து கூடையில் போட்டுக் கொண்டிருந்தது. இளம் அழகு மிகவும் துடிப்பாக செயற்படும் என்றதனால் தாய் அழகு கூடையோடு நின்று கொண்டிருந்தது. இதற்கிடையில், காசாளரிடத்தில் நின்று கொண்டிருந்த இன்னும் இரு பாழ்படுத்தும் அழகுகள் இளம் அழகினை மிகவும் உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருந்தன. இந்தக் காட்சியினைத்தான் வந்த வேலையினை கவனிக்காத இரு அழகுகளும் அவதானித்துக் கொண்டிருந்தன. இதனை அவதானிக்காத இளம் அளகு பாழ்படுத்தும் அழகுகளை அவதானித்திருந்ததோ என்னவோ தெரியாது சற்று சுறுசுறுப்பாக பொருட்களை எடுத்து போட்டுக் கொண்டிருந்தது. 

இத்தனையையும் அவதானித்து விட்டுத்தான் நான் உள்ளே நுளைந்தேன். என்ன இப்பொழுதுதான் நுளைகிறாயா? அப்படியென்றால் இவ்வளவு நேரமும் கூறியது? எப்போதும் களநிலவரங்களை அறிந்து செல்வதுதானே பாதுகாப்பு. இதுக்கான்றும் குறைச்சல் கிடையாது என்று முனுமுனுப்பது எனக்கு கேட்கின்றது. இந்த அழகு சென்றதும்....ஒன்றும் நடக்கவேயில்லை. எனக்குத் தெரியும்தானே நான் அழகாய்த்தான் இருக்கின்றேன் என்று, பிறகென்ன. இப்பொழுது எங்கோ நான் படித்திருந்த குறிப்பொன்று எனக்கு நினைவுக்கு வருகின்றது. அது அழகுக்குறிப்பா இல்லை அழகைப்பற்றிய குறிப்பா அல்லது அழகான குறிப்பா என எனக்குத் தெரியும். உங்களுக்கு புரிகின்றதா?

 "Beauty is to see but not to touch"
"அழகென்பது இரசனைக்கு விருந்தாவது, தீண்டுவதற்கல்ல"

அந்த இளம் அழகிற்கு....
எல்லாம் அழகு

இந்த உலகம் அழகு நிறைந்தது,
முழுக்க அழகுதான்,
அதில் யாவும் அழகுதான்,
உறுதி எதுவோ அது அழகுதான்,
எவை மிகவும் அழகானதோ,
இந்த உலகத்தில் அவையெல்லாம் அழகுதான்,
உனது அழகினால்,
மற்றவர்களும் அழகாகிறார்கள்,
மடையனாகிறார்கள்,
எவை மிகவும் அழகானதோ,
இந்த உலகத்தில் அத்தனையும் அழகுதான்.
உன்னைப் போன்று ஒரு அழகைக் காண,
எல்லோரும் முயற்சிக்கின்றார்கள்,
தோற்றுப் போகின்றார்கள்,
காரணம், இந்த உலகத்தின் பெருமைதான்.

அழகு உன்னில் இருக்கிறது,
அழகு எல்லாவற்றிலும் இருக்கிறது,
அழகு வானத்தில் இருக்கிறது,
அழகு நீலக் கடலில் இருக்கிறது,

மரங்கள் பனியினால் முக்காடிட்டு கிடக்கையில்,
அழகு தென்றலில் இருக்கிறது,
அழகு சிறியதிலும் இருக்கிறது, பெரியதிலும் இருக்கிறது,
அழகு எல்லாவற்றிலும் இருக்கிறது,
கறுப்பும் வெள்ளையும்
அழகு...

0 comments:

Post a Comment