நரகல் பஸ்

ஏனோ தானோ என்று இரவு நான் விழித்துக் கொண்டதனால் விடிந்துவிட்டது. அவசரமாக நான் எப்போதும் இருப்பது அரிது. இன்றும் அப்படித்தான். எந்தவொரு கருமமானாலும் பார்த்து ஆறுதலாக செய்து அலுப்படிக்காமல் வாழ்க்கையினை இரசிக்கவும் கழிக்கவும் முயல்கின்றவன் இவன்.  நாம் எல்லோரும் விதைத்த வினையின் கருமமாய் இன்று மனிதனுக்கு அவனைத்தவிர இந்த உலகத்தில் பிரசன்னமாயிருக்கின்ற அனைத்தும் ஒன்று சோர்ந்து எதிராக பழிதீர்த்துக் கொண்டிருக்கின்ற காலம் இது. இன்றும் அதன் ஒரு அங்கம்தான் என்ற எண்ணத்துடன் நானும், சன்னல் திரையினை சற்று நீக்கிக் கொண்டு என் எதிரிகளை சற்று உற்றுப் பாhத்தேன். என் எதிர்பார்ப்பு முறியடிக்கப்படவில்லை. ஆகாய வானத்தின் முகம் ஏதொ எனக்கு கற்றுத்தர முனைவதனை புரிந்து கொண்டேன். சற்று அச்சமும் கூடவே நேரமும் ஊர்வதனால், இன்றய நாளின் அப்பாவித்தனத்தினை நினைத்துக் கொண்டு நடவடிக்கைகளை கவனிக்க செயல்பட்டவர்களில் நானும் ஒருவன். இந்தப் போர் எப்போது தொடங்கும் என்பதும் தெரியாது, எப்போது முடியும் என்றும் தெரியாது மிகவும் குழப்பமாக இருந்தது. ஆனால் போர் ஒன்று எப்போது ஆரம்பிக்கும் என்ற யுத்த தந்திரம் எனக்கு ஓரளவு தெரியும் என்பதனால் நானும் தயாராகியிருந்தேன்.

நானும் எனது தளபாடங்களை தயார் படுத்திக்கொண்டு வெளியில் வர எத்தணித்ததுதான் தாமதம் என்னை நோக்கி அம்புகள் பாயத் தொடங்கின. இந்த அம்புகள் மிகவும் விசித்திரமானது. இந்த அம்புகள் கொல்லுவதற்காகவும் பயன்படும், நாம் கொள்வதற்காகவும் பயன்படும். ஆனால் நோக்கத்திற்கு ஏற்ப அதன் வீரியம் தீர்மானிக்கப்படும் என்பது நாங்கள் யுத்த முனையில் கடந்த வருடங்களில் கண்ட அனுபவம். அவற்றின் வீரியத்தினை நாம் காலம் கடந்துதான் கண்டு கொள்கின்றோம் என்பது எமது பலயீனம். எம்மிடத்தில் இருக்கின்ற கேடயங்கள் சிலபோது அதன் வீரியத்திற்கு முறண்டு பிடிப்பதாக இருக்க கூடும்.  என்றாலும், பல வேளைகளில் அவை உதவாக்கரைகளாக மாறிவிடுகின்றன என்பது நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்றும் அப்படித்தான் எனது கேடயம் ஓரளவுக்கு என்னை பாதுகாக்க உதவியிருந்தது. இதற்கு காரணம், எனது கேடயத்தின் பலமல்ல மாறாக எனது எதிரி என்மீது காட்டிய கருணை என்பதுதான் உண்மை. ஏனெனில், எதிரியன் பலத்தினை நான் மிகவும் சிறப்பாக அறிந்து வைத்திருக்கின்றேன், அவர்களிடம் இருக்கின்ற ஆயுதங்களின் வலிமை அத்தோடு எனது பலவீனங்களும் கூடவே எனக்குள் எவ்வேளைகளிலும் ஞாபகப்படுத்திக் கொள்ளப்படுபவைதான்.

வருகின்ற வழிகள் அனைத்தும் யுத்தக் கறைகளினால் சேறாய்க் கிடந்தன. கால்களை வைக்கின்ற போது எதோ செத்துக்கிடக்கின்ற உடல்களுக்கு மேலால் கால் வைத்து மி(ம)தித்து நடப்பது போன்று பக்குவமாக நகர வேண்டியிருந்தது. இந்த யுத்த திடலை முகம்கொடுப்பதற்கு இன்னும் நாம் முன்னேறவில்லை. நான் தரித்திருந்த கவசங்கள் என்னை மேலும் பலயீனப்படுத்தியது. பலயீனம் என்பதும், வாழ்க்கையில் நாம் அனுபவிக்கின்ற துக்க துயரங்கள் என்பதுவும் ஏற்படக்காரணமாகயிருப்பது வேறு யாருமல்ல. நாம் வேறு யாரையும் குறைகூறுவதும் நல்லதல்ல. இவையாவும் நாம் பெற்றுக் கொள்கின்ற புரிந்துணர்விலும், எமது பலயீனமான ஆளுமையிலும்தான் முற்றாக தங்கி தேங்கிக் கிடக்கிறது என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, நாம் துன்புறுகின்றோமானால் அதற்கு காரணம் எமது புரிந்துணர்விலும், ஆளுமையிலும் ஏற்படுகின்ற குறைதான் காரணமே அன்றி வேறு ஒன்றும் கிடையாது. சற்று அவசர ஏற்பாடுகளை மேற்கொண்டு எனது கால்களுக்கு அணிந்துதிருந்த கவசத்தினை சற்று மடித்து முறித்து வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

இந்த சடுதியான யுத்தத்திற்கு ஈடுகொடுப்பது விசமத்தனமானது என ஊகித்த நான் வழமைக்கு மாற்றமான ஒரு யுத்த உபாயத்தினை கையாளத் தீர்மானித்துக் கொண்டு பஸ் தரிப்பிடத்தில், தரித்திருந்த பஸ்ஸினை சற்று உற்றுப் பாhத்தேன். அப்போது அந்த பஸ் எனக்கு அழகாகாத் தோன்றிது என்பதனால் அதில் ஏறிவிட்டேன். ஒருமாதிரியாக யுத்த களத்தின் எல்லைதாண்டியதாக என்னை சுமந்த பஸ் சென்றது. அப்போது அந்த பஸ் சுமந்து வந்த அத்தனை நபர்களும் ஏதோவொரு வகையில் யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் என்பதனை அவதானிக்கும் வேளை எனக்கு சற்று உள்ள10ர மகிழ்ச்சியாயிருந்தது. நல்லதோ கெட்டதோ எல்லாவற்றிலும் தேவையில்லாமல் மூக்கை நுளைத்துக் கொள்வது மனிதனிடத்தில் மட்டும் இருக்கின்ற விசேட குணமல்லவா. யுத்த நிலையில் சொட்டு இரத்தம் கூட படாது காத்த எனது கவசத்தில் அங்கிருந்த ஒருவனின் ஆயுதக் கேடயத்தில் இருந்த வேரறுத்த இரத்தம் பட்டு என்னை சஞ்சலப்படுத்தியது. சிலரது ஆயுதங்களில் இன்னும் இரத்தக்கறைகள் வழிந்து ஓடிக் கொண்டிருந்தன. இத்தனை யுத்தங்களுக்குள்ளும் ஒருத்தன் அந்த பஸ் அழகாயிருக்க காரணமான ஒருத்தியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அது ஒரு வித்தியாசமான யுத்தமாக இருந்திருக்க கூடும். இது எமது யுத்தத்தில் எவ்வளவு தூரம் பாதிப்பினை ஏற்படுத்தும் என எனக்கு தெரியது. ஆனால் உள் நாட்டு யத்தம் தொடர்கிறது.

இப்படி சென்று கொண்டிருக்கையில்தான் எதாவது எதிரியின் தாக்குதலில் அகப்படுவது யுத்த முன்னெடுப்பில் மற்றொரு கோணம் என்பதுவும் எனது அனுபவம். முன்பு ஒரு முறை இப்படிச் சென்று கொண்டிருக்கையில் சாரதியின் பக்கமாக ஒரு குண்டு மழை பொழிந்து நாங்கள் எல்லாரும் சற்று மிரண்டு போன சம்பவம் எனக்குள் மீள் உருவெடுத்தது. இதனையெல்லாம் நான் மீட்டிப்பார்க்க கூட நேரமிருக்கவில்லை. அடுத்த பஸ் தரிப்பு நிலையம் கண்டு தப்பிப் பிழைத்த எமது சக கள வீரர்களை ஏற்றிக் கொண்டு அவசர அவசமாக புறப்பட்டோம். ஆனால் திடீரென வாகனத்தில் ஏதோ சத்தம் ஒன்று பிரமாண்டமாக வெளிப்பட்டது. இதனைக் கேட்டு நாங்கள் ஒருவருக்கொருவர் முகத்தை திருப்பிப் பார்த்து சற்று சிரித்துவிட்டு அப்படியே இருந்து கொண்டோம். சிலர் அப்படியே பின்வாங்கி இடைநடுவில் இறங்கிவிட்டனர். இன்னும் சிலர் வேறு வழியில்லாமல் உட்கார்ந்து இருந்தனர்.


இவ்வுலகத்தில பலர் இப்படித்தான் ஏற்படுகின்ற சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோய்ந்து விடுகின்றனர். இவர்கள் குறைந்தளவாவது பொறுமை காத்து அடுத்து என்ன நடக்கும், அதனை நாம் முகம் கொடுக்க முடியுமா என்று கூட பரீட்சிப்பது கிடையாது. மிகவும் வேதனையான விடயம் யாதெனில் இவர்கள் தங்களை மட்டுமல்லாது இன்னும் பலரை தம்மோடு சேர்த்துக் கொண்டு சென்றுவிடுகின்றனர். அல்லாது போனால் மற்றவர்கள் இவர்களைப் பார்த்து கெட்டுவிடுகின்றனர். இவர்கள் யாவரும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் உடனடியாக நிறைவேறிட வேண்டும் என எதிர்பாhக்கின்றனர். அவ்வாறெனில், அவர்கள் ஏன் மனிதனாக பிறக்க வேண்டும்? அவர்கள் ஏன் மனிதன் என்ற அந்தஸ்தில் வைத்து நோக்கப்பட வேண்டும்?

பஸ் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. நாம் பயணம் செய்வது பஸ்ஸிலா அல்லது இரயில் பெட்டி ஒன்றிலா என்று நினைக்கும் அளவுக்கு அதன் சத்தம் கடுமையாக, கொடுமையாக இருந்தது. இறங்கினால் அடுத்த நேரம் என்ன நடக்கும் என்று எமக்கு தெரியாது. ஆனால் அடுத்தடுத்து வந்த பஸ் தரிப்பிடங்களில் எவரும் நாங்கள் இருந்த பஸ்ஸில் ஏறவில்லை. அப்படி பிழையாக அந்த பஸ் வந்திருக்க முடிந்தது. ஆனால் சாரதியோ அந்த பஸ்ஸின் கோளாறினை பொருட்படுத்தவே இல்லை. வீதியில் நின்ற அனைவரும் அதனை மிகவும் உற்றுப் பாhத்துக் கொண்டிருந்தனர். துரிப்பிடத்தில் நின்வர்கள் கூட அந்த பஸ்ஸில் ஏறவில்லை. மற்ற பஸ்ஸுக்காக காத்து நின்றனர். உண்மையிலேயே குறை என்பது உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு புரியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கே அது மிகவும் இலகுவாக தென்படும். நாம் ஒரு காரியத்தினை புரிகின்ற வேளையில், அதில் இருக்கினற் கு(க)றைகளை எப்போதும் மறந்து விடுகின்றோம் அல்லது மறைத்துவிடுகின்றோம். ஆனால் வெளியில் இருக்கின்றவர்கள் அதனை சுட்டிக் காட்டுகின்ற வேளையில் நாம் பொருட்படுத்துவது கிடையாது. வெளியில் வீதியில் நின்று கொண்டிருந்தவர்கள் அதனை மிகவும் ஆபத்தானதாக கருதி பஸ் நடத்துனரிடம் காட்டுவதையும், சாரதியிடம் சுட்டிக் காட்டுவதனையும் நாங்கள் உள்ளிருந்து அவதானித்துக் கொண்டிருந்தோம். எனிலும், எமக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை போன்று சதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தோம். ஆனாலும், நான் ஏற்கனவே கூறிய யுத்தம் ஒன்று எதுவித கவலையும் இல்லாமல் நடந்தேறிக் கொண்டுதான் இருந்தது. நான் நினைக்கின்றேன் அந்த யுத்தத்தில் எதிரி மட்டும்தான் இருந்தான் என்று. 

ஏதோ அந்த குழறுபடியின் தன்மையினை அறிந்து மற்றய பஸ் ஒன்று அதற்கு உதவக் காத்திருந்தது. ஆனாலும் நாங்கள் அமர்ந்திருந்த பஸ் சாரதி அந்த உதவிக் கோரிக்கையினை மறுத்துவிட்டு பஸ்ஸை ஓட்டினார். நான் நினைக்கின்றேன் அந்த பஸ் சாரதியிடத்தில் ஒரு நலவான கொள்கை ஒன்று இருக்கின்றது என்று. அந்த சாரதி எமது தேவைகளை நன்றாக பரிந்து வைத்திருக்கும் ஒருவர் என்பது எனது கருத்து. நம்பி ஏறியவர்களை ஏமாற்றிவிடக் கூடாது அல்லது அலைச்சலுக்குள்ளாக்க கூடாது என்பதில் மிகவும் உன்னிப்பாக இருப்பவர் என்பது போல் தெரிந்தது.

எமக்கு ஏற்படுகின்ற அத்தனை விடயங்களும் எனக்கு கஷ்டமாக இருக்க காரணம் நாம் அவற்றை நோக்குகின்ற பார்வையில்தான் இருக்கின்றது. நாம் காண் முயலுகின்ற மாற்றம் என்பது மிகவும் விசித்திரமானது. அதாவது, நாம் எப்போதும் அவற்றை குறிப்பாக மற்றய மனிதர்களிடத்திருந்துதான் எதிர்பார்க்கின்றோம். ஆனால் அது மிகவும் துரதிஷ்டவசமானது. நாம் காண முயல்கின்ற மாற்றமானது எமது எண்ணத்தின் வெளிப்பாடாகும். எமது எண்ணம் மாத்திரமே எமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. நாம் இந்த உலகத்தில் மாற்றம் ஒன்றினை கருத்தில் வைப்போமானால் அது எம்மிடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் எம்மிடத்தில்தான் அதற்காக எண்ணம் இருக்கிறதல்லவா.

நாம் ஒருவரிடத்தில் கோபமாக இருக்கிறோமாயின் அல்லது ஒருவர் எம்மோடு பகையாய் இருக்கின்றார் எனில் அது ஏதோவொரு தேவையின் நிமித்தமாகத்தான் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லோருக்கும் உலகளாவிய ரீதியில் பொதுத் தேவைகள் இருக்கின்றன. அது அன்பாக இருக்கலாம், நேசமாக இருக்கலாம், கருணையாக இருக்கலாம், உதவியாக  இருக்கலாம், துணையாக இருக்கலாம், மதிப்பாக இருக்கலாம், மரியாதையாக இருக்கலாம், கௌரவாமக இருக்கலாம், நட்பாக இருக்கலாம், வாஞ்சையாக இருக்கலாம் அல்லது இப்படி எண்ணற்ற பொதுத் தேவைகள் எம்மத்தியில் காணப்படுகின்றன. இவற்றை நாம் புரிந்து கொள்ள முயறசிப்போமானால் எம்மிடத்தில் பிரச்சினைகள் ஏற்பட வழியிருக்காது. இதனைத்தான் நான் அந்த பஸ் சாரதியிடத்தில் அவதானித்தேன். அந்த மனிதர் அந்த பஸ்ஸில் பிரயாணித்த எமது தேவையினை அவர் புரிந்திருந்தார். எங்களுடைய உணர்வுகளுக்கு அவர் மதிப்பளித்தார். பிராயாணம் செய்கின்ற எமது தேவைகளான: நேரத்திற்கு செல்ல வேண்டும், பிரயாணத்தில் இடைஞ்சல்கள் இருக்க கூடாது, மழை பெய்து கொண்டிருப்பதனால் நாங்கள் அவதிப்படக் கூடாது என்பனவற்றை அவர் விளங்கிக் கொண்டார். இதனால் அவர் அதற்கேற்றாற்போல் தீர்மானத்தினை மேற்கொண்டு எப்படியாவது எனது பிரயாணிகளை உரிய இடத்தில் பாதுகாப்பாக சேர்த்துவிட வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டினார். 

இந்த சந்தர்பத்தில் அவருக்கும் பல தேவைகள் இருந்தன. என்றாலும், அவர் எமது தேவைகளை முன்னிலைப்படுத்திக் கொண்டார், அதற்கு முக்கியத்துவமளித்தார். இதனால் எமது பிரயாணத்தினை எதுவித பிரச்சிiயும் இல்லாமல் நிறைவுபடுத்திக் கொள்ள முடிந்தது. அதுவல்லாமல், அவர் தனது தேவைகளை முன்னிலை;படுத்தியிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ள முடிகின்றதல்லவா. சாதாரணமாக, அவர் இந்த பஸ்ஸிலிருந்து இறங்கி வேறு பஸ்ஸில் செல்லுமாறு பணித்திருந்தால் என்ன நடந்திருக்கும். ஆகக் குறைந்தது நான் முனுமுனுத்துக் கொண்டாவது சென்றிருப்பேனல்லாவா? படிப்பினை யாதென்றால், நீங்கள் உங்களுடைய தேவைகளுக்கும் ஏனையவர்களின் தேவைகளுக்கும் இடையில் இணைப்பினை ஏற்படுத்திக் கொண்கின்ற போது பிரச்சினைகள் ஏற்படுவதனை அல்லது ஏற்படவிருக்கின்ற வன்முறைகளை ஒழித்துவிடலாம் என்பதுதான்.

இப்படி எனது எண்ணங்கள் சுழன்று கொண்டிருக்கையில் பஸ் நான்கு ஐந்து தரிப்பிடங்களை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. குழறுபடியும் சற்று அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. அடுத்த தரிப்பிடத்திலும் ஒருவரும் ஏற மாட்டார்கள் என்ற எனது ஊகத்திற்கு ஆப்பு வைத்தாற் போன்று ஒரு யுவதி ஒன்றையும் கவனிக்காது ஏறிவிட்டார். அத்தரிப்பிடத்தில் அனேகம் பேர் ஏற முனைந்து இறுதியில் பிரச்சினை அறிந்து ஏறவில்லை. ஆனாலும், இந்த யுவதி ஏறிக்கொண்டதும் நானே எனக்குள் சிரித்துக் கொண்டேன். ஏனெனில் அவளும் சாதாரண யுவதியாகத்தான் இருந்தாள். அந்த பஸ்ஸில் ஏற்பட்டிருந்த சத்தம் அவளுக்கு எந்தவொரு முன்னெச்சரிக்கையினையும் தெரிவித்திருக்கவில்லையா என்பதுதான் இங்கு எனக்கு எழுந்த வினா? பெண்கள் ஒரு கருமம் தொடர்பாக எளிதில் தீர்மானம் மேற்கொண்டு விடுகின்றனர். இதுதான் அவர்கள் வாழ்வில் இடம்பெறுகின்ற மிகப் பெரிய தவறு. நாலுபோர் ஒரு காரியத்தினை செய்கின்றார்கள் என்பதற்காக நாமும் அதனை புரிவோம் பிழையில்லை அல்லது பிழையிருக்காது என முடிவெடுப்பது தவறுதானே? 

இன்றய நவீன யுவதிகள் அவசரப்படுவதில் வல்லவர்கள். ஏதோ இந்த அவசர வாழ்க்கை அவர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டார்களா என்பது எனக்கு தெரியவில்லை. அது ஒரு வாழ்த்தும் விடயமாக இருந்தாலும் சரி, அவர்களுடைய வாழ்க்கை பிரச்சினையாக இருந்தாலும் சரி அவசரப்பட்டுவிடுகின்றனர். அவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் அதிகம் இருப்பினும் அவற்றை ஒரு முகப்படுத்த அவர்கள் தவறிவிடுகின்றனர். இதனால், அவர்களுடைய ஆற்றல் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. பொதுவாக காலம் கடந்த ஞானம் இவர்களுக்கு அதிகம். எந்தவொரு விடயமாக இருந்தாலும் நாங்கள் பெண்கள் அல்லது யுவதிகள் என்று தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளத் தெரிந்த இவர்களுக்கு அத்தனித்துவத்தினை எதிலும் உறுதியாக பற்றிக் கொள்ள முடிவது கிடையாது. தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகமாக காலத்ததை வீணடிக்கின்ற இவர்கள், காலத்தின் மதிப்பிற்கு ஏற்ப அவர்களின் தீர்மானத்தின் எடையை கனதியாக வைத்திருப்பது கிடையாது. எப்போதும் குறைவாகவே இருக்கும். இதனால்தான் 'பெண்ணை நம்பாதே' என்று அனுபவப்பட்டவன் கூறினானோ தெரியாது. ஏனெனில், அவர்கள் நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று, நாளை மறு நாள் ஒன்று கூறுபவர்கள் என்று அவன் முடிவு செய்திருக்கின்றான் போலும். பொதுவாக அவர்கள் தமது வாழ்க்கை வட்டத்தினை மிகவும் குறுகியதாக வைத்திருப்பதுவும் இதற்கு காரணமாக இருக்கலாம், எனக்குத் தெரியாது.

நீங்கள் எப்போதும் சுயநலவாதிகள் என்று சிலர் கூறுகின்றார்கள். நான் அதனை குறைகூறுதற்கு பதிலாக வேறு கண்ணோட்டத்தில் நோக்குகின்றேன். அதாவது, நீங்கள் எப்போதும் உங்களுடைய தேவைகளை மாத்திரம் முன்னலைப்படுத்திக் கொள்கின்றீர்கள். அதனால்தான் உங்களால் அதிகம் பிரச்சினைகள் ஏற்படுவதாக எல்லோரும நச்சரிக்கின்றனர். முன்பு நான் கூறியது போன்று, உங்களுக்கு இருக்கின்ற அதே தேவைகள் போன்றுதான் ஏனையவர்களுக்கு தேவைகள் இருக்கின்றன என்பதனை நீங்கள் உனரங்கள். அவை எம் யாவருக்கும் பொதுவானவை என்பதனை முக்கியப்படுத்துங்கள். உங்களுடைய தேவைகளை ஏனையவர்களின் தேவைகளுடன் பொருத்திப்பாருங்கள், மாற்றம் என்பது தன்னிலிருந்து வரவேண்டும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் மதிப்புக்குரியவர்களாக திகழ்வீர்கள்.

ஏதோ எதியரியின் புண்ணியத்தில் சேருமிடம் வந்து சேர்ந்தது மனதுக்கு நிறைவாயிருந்தது.

0 comments:

Post a Comment